கோவை : கர்நாடகாவில் குதிரை பேரம் மூலம் ஆட்சியைக் கவிழ்க்க பா.ஜ.க. முயல்வதைக் கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் கோவையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்தியாவில் எந்த மாநிலத்திலும் காங்கிரஸ் ஆட்சி இருக்கக்கூடாது என்ற நோக்கத்துடனும், மத்தியிலும், மாநிலங்களிலும் பா.ஜ.க. கட்சி மட்டுமே ஆட்சி செய்ய வேண்டும் என்ற சர்வாதிகார பாசிச போக்கில் நரேந்திர மோடி அரசு செயல்பட்டு வருவதாக எதிர்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றனர். இந்த நிலையில், .கர்நாடகாவில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மதச்சார்பற்ற ஜனதாதளம், காங்கிரஸ் கூட்டணி அரசைக் குதிரை பேரத்தின் மூலம் சட்டமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்கி, ஆட்சி கவிழ்ப்பு முயற்சியின் மூலம் ஜனநாயக படுகொலை செய்வதாகக் கூறி, பா.ஜ.க.வை கண்டித்து தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் காங்கிரஸ் கட்சி சார்பாக இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

இதன் ஒரு பகுதியாக, கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு மாநகர் மாவட்ட காங்கிரஸ் சார்பில் தமிழக செயல் தலைவர் மயூரா ஜெயகுமார் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதேபோல், கோவை வடக்கு மாவட்ட தலைவர் வி.எம்.சி மனோகரன் தலைமையில் காந்திபார்க் பகுதியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு மத்திய அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர்.