சிங்காநல்லூர் குளத்தில் காணப்பட்ட அரிய வகை ஆமை : சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மகிழ்ச்சி

கோவை: தமிழக நகர்ப்புறங்களில் இருக்கும் சதுப்பு நிலப்பகுதிகளில் முதல்முறையாக தாவரங்கள் பற்றிய கணக்கெடுப்பு அண்மையில் எடுக்கப்பட்டது. வன மரபியல் நிறுவனம் மற்றும் மர இனப்பெருக்கம் கல்வி நிறுவனத்தின் பல்லுயிர் துறை தலைவர் சி. குன்ஹிகண்ணன் தலைமையிலான குழுவினர், குளத்தின் அனைத்து பகுதிகளில் ஆய்வு நடத்தி தாவரங்களின் வகைகளைச் சேகரித்தனர். பின்னர், அதில், சிங்காநல்லூர் குளம் பல்லுயிர் பெருக்கத்திற்கு முக்கிய பகுதியாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, கோவை குயிப் அமைப்பின் சார்பில் சிங்காநல்லூர் குளத்தில் பல்லுயிர் பாதுகாப்பிற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

கோவை: தமிழக நகர்ப்புறங்களில் இருக்கும் சதுப்பு நிலப்பகுதிகளில் முதல்முறையாக தாவரங்கள் பற்றிய கணக்கெடுப்பு அண்மையில் எடுக்கப்பட்டது. வன மரபியல் நிறுவனம் மற்றும் மர இனப்பெருக்கம் கல்வி நிறுவனத்தின் பல்லுயிர் துறை தலைவர் சி. குன்ஹிகண்ணன் தலைமையிலான குழுவினர், குளத்தின் அனைத்து பகுதிகளில் ஆய்வு நடத்தி தாவரங்களின் வகைகளைச் சேகரித்தனர். பின்னர், அதில், சிங்காநல்லூர் குளம் பல்லுயிர் பெருக்கத்திற்கு முக்கிய பகுதியாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, கோவை குயிப் அமைப்பின் சார்பில் சிங்காநல்லூர் குளத்தில் பல்லுயிர் பாதுகாப்பிற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 



மேலும், குயிப் அமைப்பின் சார்பில் இயற்கை சூழல் குறித்து பள்ளி மாணவர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக, கோவை மாநகராட்சிக்குட்பட்ட பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு 'நேட்சுரல் டிரெயல்' எனப்படும் இயற்கைச் சுற்றுலா சிங்காநல்லூர் குளத்திற்கு அழைத்து செல்லப்படுகின்றனர். அப்போது, அங்குள்ள பல்லுயிர்கள் குறித்து வல்லுநர்கள் மாணவர்களுக்கு எடுத்துரைக்கின்றனர். 



இந்த நிலையில், எஸ்.ஐ.எச்.எஸ். காலனியைச் சேர்ந்த மாநகராட்சி நடுநிலைப்பள்ளி மாணவர்கள் நேற்று சிங்காநல்லூர் குளத்திற்கு இயற்கைச் சுற்றுலாவிற்காக அழைத்துச் செல்லப்பட்டனர். மாணவர்கள் குளத்தின் சுற்றுப்புறத்தைப் பார்வையிட்டுக் கொண்டிருக்கும் போது, பல்லுயிர் பெருக்கத்தின் சான்றாக அரிய வகை ஆமை இனமான இந்தியன் கருப்பு ஆமை குளத்தின் கரையில் இனப்பெருக்கம் செய்து கொண்டு இருப்பதை மாணவர்கள் கண்டு ஆச்சரியப்பட்டனர். இதனிடையே, இதேபோல பலவகை ஆமைகள் இந்தக் குளப்பகுதிகளில் இருப்பதாக குயிப் அமைப்பினர் தெரிவித்தனர். 

"குளத்தின் சுற்றுச்சூழல் பாதுகாப்பில் ஆமைகள் முக்கிய பங்காற்றுகின்றன. மேலும், குளம் நன்கு சுகாதாரமாக இருப்பதற்கான அறிகுறியாகும். இதன்மூலம் குளத்தைப் பாதுகாப்பதன் அவசியத்தை நாம் காண முடிகிறது," என்கிறார் குயிப் அமைப்பினர் ஆராய்ச்சியாளர் இ. ஜெகன் ஏழுமலை.



பெரும்பாலும் இந்தியன் கருப்பு ஆமை ஜுலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் இனப்பெருக்கம் செய்யும் என்றும், ஒரே நேரத்தில் 7 முட்டைகளை இடும் எனக் கூறும் வல்லுநர்கள், அடைக்காலம் 149 நாட்கள் எனத் தெரிவிக்கின்றனர். மேலும், இவை இரவு நேரங்களில் நடமாடுவதுடன், சைவ மற்றும் அசைவ உண்ணியாகவும் இருப்பதாக அவர்கள் கூறுகின்றனர். 

Newsletter

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...

கோவையில் தீவிர டெங்கு கொசு ஒழிப்பு: வீடு வீடாக ஆய்வு மற்றும் புகை மருந்து தெளிப்பு பணிகள்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி, குனியமுத்தூர் கோகுலம் நகர் மற்றும்...

FMSCI இந்திய தேசிய ராலி ஸ்பிரிண்ட் சாம்பியன்ஷிப் வென்ற SRIT மாணவர் கதிரொளி

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி இயந்திரவியல் துறை மூன்றாம் ஆண்டு மாணவர் எஸ். கதிரொளி, FMSCI இந்திய தேசிய ராலி ஸ்ப...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையில் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 38.44 அடியாகவும் உயர்ந்துள்ளது....

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஜூன் 26...

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...