கோவை : கருமத்தம்பட்டி அருகே உள்ள தனியார் கல்லூரி வளாகத்தின் வெளிப்புறத்தில் நின்று கொண்டிருந்த மாணவியை காதல் விவகாரத்தில் கடத்த முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் காலேஜ் சாலையை சேர்ந்த 20 வயது மதிக்கத்தக்க இளம்பெண் கருமத்தம்பட்டி அருகே உள்ள தனியார் கல்லூரியில் இன்ஜினியரிங் படித்து வருகிறார். இதில், ரஞ்சித் என்ற ரஞ்சித் குமாரும் (25) மாணவியும் காதலித்து வந்ததாகவும், திடீரென ரஞ்சித்குமாரின் காதலுக்கு அவர் மறுப்பு தெரிவித்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில், நேற்று மாணவி கல்லூரிக்கு வந்து வளாகம் முன்பு நின்று கொண்டிருந்தார். அப்போது, திடீரென காரில் வந்த ரஞ்சித்குமாரும் அவரது நண்பர் அப்துல் ரகுமானும் மாணவியை காரில் ஏறும்படி வற்புறுத்தியுள்ளனர். ஆனால், மாணவி காருக்குள் ஏற மறுப்பு தெரிவித்ததால், அவர்கள் இருவரும் வலுக்கட்டாயமாக காரில் ஏற்ற முயற்சி செய்தனர். இதையடுத்து, மாணவியின் அலறல் சத்தம் கேட்டு அருகில் இருந்த மாணவர்கள் அந்த இளைஞர்களிடம் இருந்து மாணவியை மீட்டனர். பின்னர், சுதாரித்துக் கொண்ட காரில் வந்த இளைஞர்கள் தப்பியோடினர். இதைத்தொடர்ந்து, மாணவியின் தரப்பினர் கொடுத்த புகாரின் பேரில் கருமத்தம்பட்டி போலீசார் இளைஞர்கள் இருவரையும் கைது செய்து 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.
கல்லூரி வளாகத்தின் முன் காதல் விவகாரத்தில் மாணவியை காரில் ஏற்றி கடத்த முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.