கோவை : குனியமுத்தூர் செங்குளத்தில் கடந்த சில தினங்களாக மர்ம நபர்கள் மருத்துவக் கழிவுகள் கொட்டி செல்லும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கோடைக்குப் பின் வரும் பருவமழை காரணமாக குளங்கள் அனைத்தும் தூர்வாரும் முயற்சியிலும், சுத்தம் செய்யும் பணியிலும் சமூக ஆர்வலர்கள் இளைஞர்கள் தொடர்ந்து ஈடுபட்டனர். தற்போது, பருவமழை துவங்கி உள்ள நிலையில், நொய்யல் ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால், கோவை மாநகர் பகுதியில் உள்ள குறிச்சி குளம், குனியமுத்தூர் செங்குளம், உக்கடம் குளம் என நீர்நிலைகளில் நீர் வர துவங்கி உள்ளது.

இந்நிலையில், குனியமுத்தூர் செங்குளத்தில் கடந்த சில தினங்களாக காலாவதியான மருந்துகள், பஞ்சு, ஊசிகள் பேன்ற மருத்துவ கழிவுகளை மர்ம நபர்கள் கொட்டி செல்கின்றனர். இதனால், நோய் தொற்றுகள் ஏற்படுவதற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. குளங்களை பாதுகாக்க மாநகராட்சி நிர்வாகம் தனியார் தொண்டு நிறுவனங்களோடு இணைந்து பல்வேறு பணிகளை மேற்கொண்டு வந்தாலும், குளங்களில் மருத்துவக் கழிவுகள் கொட்டப்படுவது அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.

இதனிடையே, கொட்டப்பட்ட மருத்துவக் கழிவுகளை உடனடியாக அகற்ற வேண்டும், கழிவுகள் கொட்டி செல்லும் நபர்களை கண்டறிந்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.