கோவை : சாய்பாபா கோவில் அருகே போக்குவரத்து போலீசாரின் சோதனைக்கு எதிர்ப்பு தெரிவித்து, இரண்டு பேர் சாலையில் படுத்து உருண்ட வீடியோ காட்சிகள் சமூகவலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
கோவை : சாய்பாபா கோவில் அருகே போக்குவரத்து போலீசாரின் சோதனைக்கு எதிர்ப்பு தெரிவித்து, இரண்டு பேர் சாலையில் படுத்து உருண்ட வீடியோ காட்சிகள் சமூகவலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
கோவை சாய்பாபாகோவில் பகுதியில் நேற்று மாலை போக்குவரத்து பிரிவு காவல் துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அந்தக் சமயம், தலைகவசம் அணியாமல் ரத்தினபுரி பகுதியைச் சேர்ந்த பழனி மற்றும் புரோட்டா மாஸ்டர் மூர்த்தி ஆகியோர் இருசக்கர வாகனத்தில் வந்துள்ளனர். இருவரும் மது போதையில் இருந்ததாகக் கூறப்படுகிறது. அப்போது, காவலர்கள் அவர்களது வாகனத்தை தடுத்து நிறுத்தினர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்ட பழனி, மூர்த்தி ஆகியோர் சாலையின் நடுவே படுத்து போராட்டம் நடத்தினர். மேலும், போலீசார் டிராபிக்கினை மதிப்பதாக இருந்தால், எல்லோரையும் சோதனை பண்ண வேண்டுமெனக் கூறி சாலையின் நடுவே படுத்து உருண்டனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த சம்பவம் குறித்து வழக்கறிஞர் பிரதாப் கூறும்போது ;- சாய்பாபாகாலனி போக்குவரத்து போலீசார் இருசக்கர வாகனத்தில் வருபவர்களை தடுத்து நிறுத்தி வாகன பரிசோதனை செய்வது போல, தனியார் பேருந்துகளின் அட்டகாசங்களை கண்டுகொள்வதில்லை. சாய்பாபாகோவில் மேட்டுப்பாளையம் சாலைகளில் தனியார் பேருந்துகள் அதிவேகமாக செல்கின்றன. அதனால், பல்வேறு விபத்துக்களும் நடைபெறுகிறது. போக்குவரத்து விதிகளை மீறுபவர்கள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டியவர்கள். ஆனால், தனியார் பேருந்துகளுக்கு மட்டும் போக்குவரத்து விதிகளுக்கு விலக்கு அளித்து இருப்பது சக மக்கள் மத்தியில் அதிருப்தியை உள்ளது, என தெரிவித்தார்.
இருசக்கர வாகனத்தில் வருபவர்களை சோதனை செய்து அபராதம் விதிப்பது போல, அதிவேகமாக பேருந்தை இயக்கி, உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும் வகையில் வாகனத்தை ஓட்டி, அதிக சத்தம் எழுப்பும் ஹாரன்களை பயன்படுத்தி சட்ட விதி மீறல்களில் ஈடுபடும் தனியார் பேருந்துகளின் மீதும் நடவடிக்கை எடுத்தால் நடுநிலையாக இருக்கும் என சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.