பவானி ஆற்று வெள்ளத்தில் சிக்கி கல்லூரி மாணவர்கள் இருவர் உயிரிழப்பு

கோவை : மேட்டுப்பாளையம் பவானி ஆற்றில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் சிக்கி இரண்டு கல்லூரி மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோவை : மேட்டுப்பாளையம் பவானி ஆற்றில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் சிக்கி இரண்டு கல்லூரி மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேட்டுப்பாளையம் அருகே சிறுமுகை வச்சினா பாளையத்தில் உள்ள நீரேற்று நிலையம் அருகே கோவையைச் சேர்ந்த இளைஞர்கள் 15 பேர் குழுவாக இன்று மேட்டுப்பாளையம் பவானி ஆற்றில் குளிக்கச் சென்றுள்ளனர். ஆற்றில் இறங்கி உற்சாகமாக இளைஞர்கள் அனைவரும் குளித்து கொண்டிருந்துள்ளனர். அப்போது, திடீரென பவானி ஆற்றில் தண்ணீர் வரத்து அதிகரிக்க துவங்கியுள்ளது. இது தெரியாமல் இளைஞர்கள் குளித்துக்கொண்டு இருந்த நிலையில், மேலும் நீரோட்டம் அதிகரித்தது. இந்த திடீர் வெள்ளத்தில் குளித்து கொண்டிருந்த சோமனூர் பகுதியைச் சேர்ந்த பிரசாந்த் (19), கருமத்தம்பட்டி பகுதியைச் சேர்ந்த கோடீஸ்வரன் (19) ஆகியோர் ஆற்றில் அடித்து செல்லப்பட்டனர். உடன் இருந்த இளைஞர்கள் காப்பற்ற முயன்ற போது இருவருக்கும் நீச்சல் தெரியாததால் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர். 

இதனையடுத்து, மேட்டுப்பாளையம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. பின்னர், நிகழ்விடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் ஆற்றில் இறங்கி தேடிய நிலையில் கோடீஸ்வரன் உடல் மட்டும் கண்டெடுக்கப்பட்டது. வினோத் உடலை தேடும் பணி நடைபெற்று வருகிறது. ஆற்றில் திடீரென ஏற்பட்ட வெள்ளத்தால் நீரில் மூழ்கி இளைஞர்கள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும், இது குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள சிறுமுகை போலீசார் உயிரிழந்த கோடீஸ்வரன் உடலைப் பிரேதப் பரிசோதனைக்காக மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Newsletter

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...

கோவையில் தீவிர டெங்கு கொசு ஒழிப்பு: வீடு வீடாக ஆய்வு மற்றும் புகை மருந்து தெளிப்பு பணிகள்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி, குனியமுத்தூர் கோகுலம் நகர் மற்றும்...

FMSCI இந்திய தேசிய ராலி ஸ்பிரிண்ட் சாம்பியன்ஷிப் வென்ற SRIT மாணவர் கதிரொளி

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி இயந்திரவியல் துறை மூன்றாம் ஆண்டு மாணவர் எஸ். கதிரொளி, FMSCI இந்திய தேசிய ராலி ஸ்ப...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையில் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 38.44 அடியாகவும் உயர்ந்துள்ளது....

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஜூன் 26...

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...