கோவை : மண்ணெண்ணெய் ஊற்றி மனைவியை எரித்து கொலை செய்த வழக்கில் கணவனுக்கு ஆயுள் தண்டனை விதித்து கோவை நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

பொள்ளாச்சியை அடுத்த குள்ளக்கா பாளையத்தைச் சேர்ந்த தம்பதியினர் குமார் - உமாமகேஸ்வரி (33). இவர்களுக்கு ஏற்பட்ட குடும்ப பிரச்சனை காரணமாக கடந்த 2016-ம் ஆண்டு ஜனவரி 11-ம் தேதி உமா மகேஸ்வரியை அவரது கணவர் மண்ணெண்ணெய் ஊற்றி எரித்து கொலை செய்து விட்டார். இதையடுத்து, குமாரை போலீசார் கைது செய்தனர். மேலும், இது தொடர்பான வழக்கு கோவை ஏ.டி.ஜே. முதலாவது நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த நிலையில், மனைவியை மண்ணெண்ணெய் ஊற்றி கொலை செய்த குமாருக்கு ஆயுள் தண்டனையும், 1,000 ரூபாய் அபராதமும் விதித்து நீதிபதி குணசேகரன் தீர்ப்பு அளித்தார்.