மாற்றுத்திறனாளிகளும் வந்து செல்லும் விதமாக மாறும் கோவை அரசு அலுவலகங்கள்

கோவை : உச்சநீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் மாற்றுத்திறனாளிகள் எளிதில் வந்து செல்லக்கூடிய வகையில், கோவையில் உள்ள அரசு அலுவலகங்களை மாற்றியமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.

கோவை : உச்சநீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் மாற்றுத்திறனாளிகள் எளிதில் வந்து செல்லக்கூடிய வகையில், கோவையில் உள்ள அரசு அலுவலகங்களை மாற்றியமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.

மாற்றுத்திறனாளிகள் எளிதில் வந்து செல்லக்கூடிய வகையில், அரசு அலுவலகங்களின் கட்டமைப்பு வசதிகளை உருவாக்கும் திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் கோவை உள்பட 26 நகரங்கள் தேர்வு செய்யப்பட்டன. இதற்காக கடந்த 2016-ம் ஆண்டு ஜுலை மாதம் முதற்கட்டமாக 50 அரசு அலுவலகங்களில் முன்னோட்டம் செய்து பார்க்கப்பட்டது. இந்த நிலையில், 3 ஆண்டுகளுக்குப் பிறகு, கோவையில் உள்ள அரசு அலுவலகங்களில் மாற்றுத்திறனாளிகள் எளிதில் வந்து செல்லக்கூடிய வகையிலான திட்டப்பணிகள் மேற்கொள்ளப்பட இருக்கின்றன. முதற்கட்டமாக பிராந்திய போக்குவரத்து அலுவலகம் மாற்றப்பட்டது. இதைத் தொடர்ந்து, தற்போது, கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள வணிக வரி அலுவலகத்தில், பிரெய்லி போர்டு, சறுக்கு பாதைகள், மாற்றியமைக்கப்பட்ட கழிவறைகள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்று வருகிறது.

மாற்றுத் திறனாளிகளுக்கு வந்து செல்லும் விதமாக அமைக்கப்படும் இந்தக் கட்டுமானப் பணிகளை பொதுப் பணித்துறை மேற்கொண்டு வருகிறது. இது தொடர்பாக பி.டபூள்யூ.டி. துறையின் மூத்த அதிகாரி கூறுகையில், "'ஆக்ஷசசிபிள் இந்தியா கேம்பைன்' திட்டத்தின் கீழ் இந்தப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்கான நிதியை மத்திய அரசு ஒதுக்கியுள்ளது. மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள பழைய கட்டிடத்திற்கு ரூ. 1.79 கோடியும், புதிய கட்டிடத்திற்கு ரூ. 3 கோடியும், வணிக வரி அலுவலகத்திற்கு ரூ. 2.72 கோடியும், ஆர்.டி.ஓ. அலுவலகத்திற்கு ரூ. 70 லட்சமும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது," என்றார். 

மாற்றுத்திறனாளிகள் உரிமை சட்டத்தின் கீழ் அனைத்து அரசு அலுவலகங்களை மாற்றுத் திறனாளிகள் எளிதில் வந்து செல்லக் கூடிய வகையில் மாற்றியமைக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்பேரில், தமிழக அரசு சென்னையை அடுத்து கோவையில் தற்போது இந்தப் பணிகளை மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...

கோவையில் தீவிர டெங்கு கொசு ஒழிப்பு: வீடு வீடாக ஆய்வு மற்றும் புகை மருந்து தெளிப்பு பணிகள்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி, குனியமுத்தூர் கோகுலம் நகர் மற்றும்...

FMSCI இந்திய தேசிய ராலி ஸ்பிரிண்ட் சாம்பியன்ஷிப் வென்ற SRIT மாணவர் கதிரொளி

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி இயந்திரவியல் துறை மூன்றாம் ஆண்டு மாணவர் எஸ். கதிரொளி, FMSCI இந்திய தேசிய ராலி ஸ்ப...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையில் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 38.44 அடியாகவும் உயர்ந்துள்ளது....

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஜூன் 26...

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...