ஜோலார்பேட்டையில் இருந்து ரயில் மூலம் வில்லிவாக்கத்திற்கு வந்தடைந்த 2.50 மில்லியன் குடிநீர்

சென்னை : சென்னை மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் ஜோலார்பேட்டையில் இருந்து ரயில் மூலம் வில்லிவாக்கத்திற்கு 2.50 மில்லியன் லிட்டர் குடிநீர் ரயில் மூலம் இன்று சென்னை வில்லிவாக்கம் கொண்டு வரப்பட்டது.

சென்னை : சென்னை மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் ஜோலார்பேட்டையில் இருந்து ரயில் மூலம் வில்லிவாக்கத்திற்கு 2.50 மில்லியன் லிட்டர் குடிநீர் ரயில் மூலம் இன்று சென்னை வில்லிவாக்கம் கொண்டு வரப்பட்டது. 

சென்னை மாநகர பகுதிகளில் பொதுமக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய வேலூர் மாவட்டம், ஜோலார்பேட்டை மேட்டு சக்கரக்குப்பம் காவிரி கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம் தினந்தோறும் 10 மில்லியன் லிட்டர் குடிநீர் ரயில்வே வேகன்கள் மூலம் கொண்டுவர முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ரூ.66 கோடி நிதி ஒதுக்கி இத்திட்டத்தை நிறைவேற்ற உத்தரவிட்டார். அதனைத் தொடர்ந்து, முதற்கட்டமாக 50,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட 50 வேகன்களில் 2.50 மில்லியன் லிட்டர் குடிநீர் இரயில் மூலம் இன்று சென்னை வில்லிவாக்கம் வந்தடைந்தது.



சென்னைக்கு குடிநீர் வழங்கும் இத்திட்டத்தை நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்பு திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி, மீன்வளம், பணியாளர் (ம) நிர்வாகச் சீர்திருத்தத்துறை அமைச்சர் டி.ஜெயகுமார், மாண்புமிகு ஊரகத் தொழில்துறை அமைச்சர் பா. பென்ஜமின் மற்றும் தமிழ் ஆட்சிமொழி மற்றும் தமிழ் பண்பாடுத்துறை அமைச்சர் கே.பாண்டியராஜன் இன்று துவக்கி வைத்தனர்.

மாண்புமிகு நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்பு திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் அவர்கள் பேசும்பொழுது தெரிவித்ததாவது : 

மாநிலத்தில் பருவமழை பொய்த்த நிலையிலும், அனைத்து ஏரிகளிலும் நீர் இருப்பு குறைந்த அளவே இருந்த போதிலும், சென்னை மாநகர மக்களுக்கு கடல்நீரை குடிநீராக்கும் திட்டம், வீராணம் திட்டம், நெய்வேலி நீர்ப்படுகையிலிருந்து கூடுதலாக புதிய ஆழ்துளை கிணறுகள் அமைத்தல், விவசாய கிணறுகள் வாடகைக்கு அமர்த்துதல், சிக்கராயபுரம் கல்குவாரி உள்ளிட்ட குடிநீர் ஆதாரங்கள் மூலம் நாளொன்றுக்கு 525 மில்லியன் லிட்டர் குடிநீர் அளவு வழங்கப்பட்டு வருகிறது. பொதுமக்களுக்கு தினசரி தேவையான 525 மில்லியன் லிட்டர் குடிநீர் வழங்க அரசு பல்வேறு விதமான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. 

பல்வேறு குடிநீர் திட்டப்பணிகளின் காரணமாக பருவமழை பொய்த்த நிலையிலும் சென்னையில் தினசரி 525 மில்லியன் லிட்டர் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. இந்த 525 மில்லியன் லிட்டர் குடிநீர் அளவானது வருகின்ற நவம்பர் மாதம் வரை தொடர்ந்து உறுதியாக வழங்கப்படும். இந்நிலை நீடிப்பதற்கு ஏதுவாக சென்னைக்கு அடுத்துள்ள மாவட்டங்களிலுள்ள குடிநீர் ஆதாரங்கள் மூலமாக சென்னைக்கு குடிநீர் எடுத்து வருவதற்கான சாத்தியக் கூறுகள் ஆய்வு செய்யப்பட்டு புதிய நீராதாரங்கள் மூலம் குடிநீர் பெறப்பட்டு வருகிறது. இதன் ஓர் அங்கமாக வேலூர் கூட்டுக் குடிநீர் திட்டத்தின் மூலமாக ஜோலார்பேட்டையிலிருந்து குடிநீரை ரயிலின் மூலம் சென்னைக்கு கொண்டு வருவதற்கான சாத்தியக் கூறுகள் கண்டறியப்பட்டன. இப்பணிகளை மேற்கொள்வதற்காக, ரூ. 66 கோடி திட்ட மதிப்பீட்டில் இத்திட்டத்திற்கு தேவைப்படும் உட்கட்டமைப்பு பணிகளான குழாய் பதிக்கும் பணிகள் ஜோலார்பேட்டை ரயில் நிலையம் மற்றும் வில்லிவாக்கம் ரயில் நிலையங்களில் மேற்கொள்ளப்பட்டு பணிகள் முடிவுற்றன. 

வேலூர் மாவட்டம், ஜோலார்பேட்டையிலிருந்து 50,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட 50 வேகன்கள் மூலமாக தினசரி 4 நடை என மொத்தம் 10 மில்லியன் லிட்டர் குடிநீர் சென்னை மாநகருக்கு வழங்கப்படும். முதல் நடையாக 2.50 மில்லியன் லிட்டர் குடிநீர் ஜோலார்பேட்டையிலிருந்து வில்லிவாக்கம் இரயில் நிலையத்திற்கு இன்று கொண்டு வரப்பட்டுள்ளது. இந்தத் தண்ணீர் கீழ்ப்பாக்கம் குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கு குழாய்கள் மூலம் அனுப்பி சுத்திகரிக்கப்பட்டு, பின்னர் பொதுமக்களுக்கு வழங்கப்படும். இதன்படி, ஜோலார்பேட்டையிலிருந்து வில்லிவாக்கத்திற்கு தினசரி 10 மில்லியன் லிட்டர் குடிநீர் ஆறு மாத காலத்திற்கு கொண்டு வரப்படும், என்றார். 

இந்த நிகழ்ச்சியில், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அரசு முதன்மைச் செயலாளர் ஹர்மந்தர் சிங், சென்னை பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரிய மேலாண்மை இயக்குநர் த.ந. ஹரிஹரன், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய மேலாண்மை இயக்குநர் சி.என். மகேஸ்வரன், அம்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் வி. அலெக்ஸாண்டர், சென்னை பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரிய தலைமைப் பொறியாளர் (இயக்குதல் (ம) பராமரித்தல்) சி. ஆறுமுகம், தென்னக ரயில்வே கோட்ட மேலாளர் பி.மகேஷ், தென்னக ரயில்வே கூடுதல் கோட்ட மேலாளர் முகுந்த், சென்னை பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரிய அலுவலர்கள் மற்றும் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...

கோவையில் தீவிர டெங்கு கொசு ஒழிப்பு: வீடு வீடாக ஆய்வு மற்றும் புகை மருந்து தெளிப்பு பணிகள்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி, குனியமுத்தூர் கோகுலம் நகர் மற்றும்...

FMSCI இந்திய தேசிய ராலி ஸ்பிரிண்ட் சாம்பியன்ஷிப் வென்ற SRIT மாணவர் கதிரொளி

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி இயந்திரவியல் துறை மூன்றாம் ஆண்டு மாணவர் எஸ். கதிரொளி, FMSCI இந்திய தேசிய ராலி ஸ்ப...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையில் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 38.44 அடியாகவும் உயர்ந்துள்ளது....

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஜூன் 26...

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...