கோவை - நீலகிரி சாலைப் பணிகளை செயல்படுத்த மத்திய அமைச்சரிடம் எம்.பி., ஆ. ராசா மனு

டெல்லி : கடந்த 10 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டுள்ள கோவை - நீலகிரி சாலைப் பணிகளை செயல்படுத்த மத்திய நெடுஞ்சாலைத்துறை மற்றும் போக்குவரத்துத்துறை அமைச்சர் நிதின் கட்கரியை நீலகிரி எம்.பி. ஆ.ராசா நேரில் சந்தித்து வலியுறுத்தினார்.

டெல்லி : கடந்த 10 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டுள்ள கோவை - நீலகிரி சாலைப் பணிகளை செயல்படுத்த மத்திய நெடுஞ்சாலைத்துறை மற்றும் போக்குவரத்துத்துறை அமைச்சர் நிதின் கட்கரியை நீலகிரி எம்.பி. ஆ.ராசா நேரில் சந்தித்து வலியுறுத்தினார். 

டெல்லியில் மத்திய நெடுஞ்சாலைத்துறை மற்றும் போக்குவரத்துத்துறை அமைச்சர் நிதின் கட்கரியை நீலகிரி மக்களவை தொகுதி எம்.பி. ஆ.ராசா நேற்று சந்தித்தார். அப்போது, மத்திய போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சராக மீண்டும் நியமிக்கப்பட்டிருக்கும் நிதின் கட்கரிக்கு அவர் வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டார். 

பின்னர், கோவையில் இருந்து நீலகிரிக்கு செல்லும் போக்குவரத்து திட்டங்கள் கடந்த 10 ஆண்டுகளாக கிடப்பில் உள்ளதால் அவற்றை செயல்படுத்தக் கோரி மனு அளித்தார். மேலும், அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது :- கோவை முதல் சத்தியமங்கலம் (65 கிமீ) சாலை, கிழக்கு பைபாஸ் ரோடு (54 கிமீ), கோவை - கரூர் (114 கிமீ), எல்&டி பைபாஸ் சாலை ஆகிய பகுதிகளில் பல ஆண்டுகளாக கிடப்பில் உள்ள சாலை போக்குவரத்து பணிகளை விரைவில் முடித்து மக்கள் பயன்பாட்டுக்குக் கொண்டுவர வேண்டும். 

மேலும், 2024ம் ஆண்டுக்குள் நாட்டின் பொருளாதாரம் 5 ட்ரில்லியன் டாலருக்கு உயர்த்தப்படும் என பிரதமர் மோடி தெரிவித்தார். ஆகவே, பொருளாதார மேம்பாட்டில் கோவை மாவட்டத்துக்கு மிகப்பெரிய அளவில் பங்கு இருக்கிறது. வர்த்தக ரீதியில் பொருளாதாரத்தை உயர்த்துவதில் கோவை போன்ற பகுதிகளின் தரம் உயர்த்தப்படுவதின் மூலம் இலக்கை எட்ட வாய்ப்புள்ளது, என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Newsletter

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...

கோவையில் தீவிர டெங்கு கொசு ஒழிப்பு: வீடு வீடாக ஆய்வு மற்றும் புகை மருந்து தெளிப்பு பணிகள்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி, குனியமுத்தூர் கோகுலம் நகர் மற்றும்...

FMSCI இந்திய தேசிய ராலி ஸ்பிரிண்ட் சாம்பியன்ஷிப் வென்ற SRIT மாணவர் கதிரொளி

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி இயந்திரவியல் துறை மூன்றாம் ஆண்டு மாணவர் எஸ். கதிரொளி, FMSCI இந்திய தேசிய ராலி ஸ்ப...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையில் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 38.44 அடியாகவும் உயர்ந்துள்ளது....

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஜூன் 26...

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...