தென்மேற்கு பருவமழை குறைந்ததன் எதிரொலி : நீலகிரியில் முக்கிய அணைகளின் நீர்மட்டம் சரிவு

நீலகிரி : தென்மேற்கு பருவமழை குறைவாக பெய்து வரும் காரணத்தால் உதகையில் உள்ள முக்கிய அணைகளின் நீர்மட்டம் குறைந்துள்ளது.

நீலகிரி : தென்மேற்கு பருவமழை குறைவாக பெய்து வரும் காரணத்தால் உதகையில் உள்ள முக்கிய அணைகளின் நீர்மட்டம் குறைந்துள்ளது.

நீலகிரி மாவட்டம் உதகை நகராட்சியில் 36 வார்டுகள் உள்ளன. இந்த வார்டுகளில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகிறார்கள். சுற்றுலா நகரமான உதகைக்கு ஆண்டுதோறும் 30 லட்சத்துக்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் வருகை தருகின்றனர். மேலும், இங்கு 500-க்கும் மேற்பட்ட தங்கும் விடுதிகள், ஓட்டல்கள் இயங்கி வருகிறது. இவர்களின் குடிநீர் தேவையைப் பூர்த்தி செய்ய, மார்லிமந்து அணை, பார்சன்ஸ்வேலி அணை, மார்லிமந்து அணை, டைகர்ஹில் அணை, தொட்டபெட்டா அப்பர் அணை, கோடப்பமந்து அப்பர் அணை உள்ளிட்ட அணைகளில் முக்கிய குடிநீர் ஆதாரமாக உள்ளன.



பார்சன்ஸ்வேலி முதல் குடிநீர் திட்டம், 2-வது குடிநீர் திட்டம் மூலம் தினமும் 10 எம்.எல்.டி. (ஒரு எம்.எல்.டி. 10 லட்சம் லிட்டர்) தண்ணீர் எடுக்கப்படுகிறது. மற்ற 9 அணைகளில் இருந்து தினமும் 0.45 எம்.எல்.டி. தண்ணீர் எடுக்கப்பட்டு விநியோகிக்கப்படுகிறது. கடந்த ஜூன் மாதம் தொடங்கி பெய்ய வேண்டிய தென்மேற்கு பருவமழை அவ்வப்போது குறைவாக பெய்து உள்ளதால், அணைகளில் நீர்மட்டம் வெகுவாக குறையத் தொடங்கி உள்ளது. உதகை நகரின் குடிநீர் ஆதாரமாக விளங்கி வரும் பார்சன்ஸ்வேலி அணையில் மொத்த கொள்ளளவான 50 அடியில், 20 அடிக்கு நீர்மட்டம் உள்ளது.

மார்லிமந்து அணையில் 8 அடிக்கும், டைகர்ஹில் அணையில் 14 அடிக்கும், கோரிசோலா அணையில் 3 அடிக்கும் தண்ணீர் இருப்பு உள்ளது. தற்போது, உதகையில் உள்ள அணைகளில் இருக்கும் தண்ணீரை வருகிற செப்டம்பர் மாதம் இறுதி வரை விநியோகிக்க முடியும். அதனை தொடர்ந்து, வடகிழக்கு பருவமழை தொடங்கும் போது, குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பு இருக்காது என்று நகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

Newsletter

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...

கோவையில் தீவிர டெங்கு கொசு ஒழிப்பு: வீடு வீடாக ஆய்வு மற்றும் புகை மருந்து தெளிப்பு பணிகள்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி, குனியமுத்தூர் கோகுலம் நகர் மற்றும்...

FMSCI இந்திய தேசிய ராலி ஸ்பிரிண்ட் சாம்பியன்ஷிப் வென்ற SRIT மாணவர் கதிரொளி

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி இயந்திரவியல் துறை மூன்றாம் ஆண்டு மாணவர் எஸ். கதிரொளி, FMSCI இந்திய தேசிய ராலி ஸ்ப...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையில் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 38.44 அடியாகவும் உயர்ந்துள்ளது....

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஜூன் 26...

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...