நீலகிரி : குன்னூர் தேயிலை ஏல மையத்தில் வரத்து அதிகரிப்பால் 22 சதவீத தேயிலைகள் தேக்கமடைந்தன. மேலும், 3 ரூபாய் வரையில் விலையும் வீழ்ச்சியடைந்திருப்பது விவசாயிகளிடையே ஏமாற்றத்தை ஏற்படுத்தியது.

குன்னூர் தேயிலை ஏல மையத்தில் உற்பத்தி செய்யப்பட்ட தேயிலைகளின் ஏலம் இன்று காலை துவங்கிய மாலை வரை ஆன்லைனில் நடைபெற்றது. இந்த ஏலத்தில், மொத்தம் 19 லட்சத்து 77 ஆயிரம் கிலோ சி.டி.சி. ரகமும், 41 ஆயிரம் கிலோ ஆர்தோடக்ஸ் வகை தேயிலைகள் ஏலத்திற்கு வந்தன. சராசரியாக ஒரு கிலோ குறைந்தது ரூ. 79 முதல் ரூ. 80 வரை விலை போனது. ஏலத்தின் இறுதியில் 78 சதவீதம் தேயிலை மட்டுமே விற்பனையானது. 22 சதவீதம் தேயிலைகள் தேக்கமடைந்தன. இந்த ஏலத்தில், எகிப்து, பாகிஸ்தான், ஈரான் போன்ற தெற்காசிய நாடுகளைச் சேர்ந்த தேயிலை வர்த்தகர்களின் பங்கேற்பு அதிகம் இருந்த போதிலும், வரத்து அதிகரிப்பால் தேக்கநிலை காணப்பட்டது.

தற்போது, நீலகிரியில் சாரல் மழை பெய்து வருவதாலும், தேயிலை செடிகளுக்கு ஏற்ற காலநிலைக் காணப்படுவதால், பசும் தேயிலை வளர்ச்சி அதிகரித்து, உற்பத்தியும் அதிகரித்தது. இதனால், தேயிலை ஏலத்தில் தேக்கநிலை ஏற்பட்டு, விலையிலும் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர்.