கோவையில் அரசு அடையாள ஸ்டிக்கரை ஒட்டி வாக்குவாதத்தில் ஈடுபட்ட வாடகைக் கார் ஓட்டுநர் : ஸ்டிக்கரை அகற்றும்படி எச்சரித்து அனுப்பிய போலீசார்

கோவை : கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே அரசு அடையாள ஸ்டிக்கரை ஒட்டி, அரசு அதிகாரி போல் ஆட்டோ ஓட்டுநரை மிரட்டிய வாடகைக் கார் ஓட்டுநரை போலீசார் எச்சரித்து அனுப்பினர்.

கோவை : கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே அரசு அடையாள ஸ்டிக்கரை ஒட்டி, அரசு அதிகாரி போல் ஆட்டோ ஓட்டுநரை மிரட்டிய வாடகைக் கார் ஓட்டுநரை போலீசார் எச்சரித்து அனுப்பினர். 

கோவையில் உள்ள பல்வேறு பகுதிகளில் போலீஸ், தமிழ்நாடு அரசு, பிரஸ், அட்வகேட் என பல அடையாளங்களை போலியாக தயாரித்து ஒட்டி வாகனங்களை இயக்கி வருகின்றனர். இது தொடர்பாக பலமுறை புகார்கள் எழுந்தன. அதேபோல, சமூகவிரோதிகள் சிலர் இதுபோன்ற அடையாளங்களை வாகனங்களில் ஒட்டிக்கொண்டு சட்டவிரோத செயல்களை எளிமையாக செய்கின்றனர். 



இந்த நிலையில், நஞ்சுண்டாபுரம் பகுதியைச் சேர்ந்த பால்ராஜ் என்பவர் அரசு அலுவலர்களுக்கு வாடகை வண்டி ஓட்டி வருகிறார். இவர் அரசுப் பணியின் போது தற்காலிக ஸ்டிக்கர்களை ஒட்டுவதற்கு பதிலாக நிரந்தரமாக ஒட்டி தனது காரை இயக்கி வந்தார். இந்த சூழலில், இவர் இன்று காலை கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வரும் போது முன்னே சென்ற ஆட்டோ ஓட்டுநருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அப்போது, காரில் ஒட்டப்பட்ட தமிழ்நாடு அரசு என்ற எழுத்தைக் காண்பித்து மிரட்டியுள்ளார்.

பின்னர், தகவலறிந்து வந்த போலீசார், விசாரணை செய்து தற்காலிக வாகனத்தில் நிரந்தர ஸ்டிக்கரை ஒட்டியது தவறு என எச்சரித்து ஸ்டிக்கரை அகற்றும்படி தெரிவித்தனர். இந்த சம்பவம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் பரபரப்பை ஏற்படுத்தியது.

Newsletter

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...

கோவையில் தீவிர டெங்கு கொசு ஒழிப்பு: வீடு வீடாக ஆய்வு மற்றும் புகை மருந்து தெளிப்பு பணிகள்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி, குனியமுத்தூர் கோகுலம் நகர் மற்றும்...

FMSCI இந்திய தேசிய ராலி ஸ்பிரிண்ட் சாம்பியன்ஷிப் வென்ற SRIT மாணவர் கதிரொளி

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி இயந்திரவியல் துறை மூன்றாம் ஆண்டு மாணவர் எஸ். கதிரொளி, FMSCI இந்திய தேசிய ராலி ஸ்ப...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையில் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 38.44 அடியாகவும் உயர்ந்துள்ளது....

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஜூன் 26...

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...