பிளாஸ்டிக் தடை விவகாரத்தில் வியாபாரிகளை அச்சுறுத்துவதை நிறுத்த வேண்டும் : தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் தலைவர் பேட்டி

திருப்பூர் : பிளாஸ்டிக் தடை விவகாரத்தில் தமிழக வியாபாரிகளை அதிகாரிகள் அச்சுறுத்துவதை நிறுத்த வேண்டும் என திருப்பூரில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாநில தலைவர் விக்ரமராஜா தெரிவித்துள்ளார்.

திருப்பூர் : பிளாஸ்டிக் தடை விவகாரத்தில் தமிழக வியாபாரிகளை அதிகாரிகள் அச்சுறுத்துவதை நிறுத்த வேண்டும் என திருப்பூரில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாநில தலைவர் விக்ரமராஜா தெரிவித்துள்ளார்.



தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு கூட்டமைப்பின் சார்பில் திருப்பூர் மாவட்ட நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் மாநில தலைவர் விக்ரமராஜா தலைமையில் திருப்பூரில் உள்ள தனியார் ஓட்டலில் நடைபெற்றது. 



அப்போது, செய்தியாளர்களிடம் விக்ரமராஜா பேசியதாவது :- பிளாஸ்டிக் தடை விவகாரத்தில் தமிழக வியாபாரிகளை அதிகாரிகள் அச்சுறுத்துவதை நிறுத்த வேண்டும். மாநில அரசு பிளாஸ்டிக் பொருட்களுக்கான மாற்றுப்பொருள் அறிமுகப்படுத்தியபின் வியாபாரிகளுக்கு அறிவுறுத்த வேண்டும். பன்னாட்டு நிறுவனங்களின் பொருட்கள் பிளாஸ்டிக் பையில் வழங்கப்பட்டு வருகிறது. அதனை மாநில அரசு கண்டுகொள்வதில்லை.

ஜி.எஸ்.டி. எளிய நடைமுறைக்கு கொண்டு வருவதாக தெரிவித்துள்ளனர். ஆனால், அதில் தெளிவான விளக்கம் இல்லை. அதனால், மத்திய அமைச்சரை சந்தித்து முறையிடவுள்ளோம். வாடகை கட்டிடத்திற்கு ஜி.எஸ்.டி.யில் இருந்து விலக்களிக்க வேண்டும். பெரும்பாலான வணிக நிறுவனங்கள் வாடகை கட்டிடத்திலேயே செயல்படுகிறது. வெளிநாடு நிறுவனங்கள் கடை திறப்பதற்கு முயற்சி நடைபெறுகிறது. உள்நாட்டு வணிகத்தை காப்பதற்கு அரசு நடவடிக்கை வேண்டும், என்று கூறினார்.

Newsletter

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...

கோவையில் தீவிர டெங்கு கொசு ஒழிப்பு: வீடு வீடாக ஆய்வு மற்றும் புகை மருந்து தெளிப்பு பணிகள்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி, குனியமுத்தூர் கோகுலம் நகர் மற்றும்...

FMSCI இந்திய தேசிய ராலி ஸ்பிரிண்ட் சாம்பியன்ஷிப் வென்ற SRIT மாணவர் கதிரொளி

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி இயந்திரவியல் துறை மூன்றாம் ஆண்டு மாணவர் எஸ். கதிரொளி, FMSCI இந்திய தேசிய ராலி ஸ்ப...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையில் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 38.44 அடியாகவும் உயர்ந்துள்ளது....

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஜூன் 26...

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...