கோவை : கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கள்ளிப்பாளையம் பகுதியைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட தாழ்த்தப்பட்டோர் சமூகத்தை சேர்ந்த மக்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கள்ளிப்பாளையம் மக்கள் மீது கொலைவெறி தாக்குதல் நடத்திய நபர்கள் அனைவரின் மீதும் நடவடிக்கை எடுக்கக்கோரியும், தாக்குதலில் பாதிக்கப்பட்ட இருவருக்கு உயர்சிகிச்சை வழங்கிடவும், அப்பாவி மக்கள் 50 பேர் மீது போடப்பட்ட வழக்கைத் திரும்பப் பெறக்கோரி முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் தமிழ்புலிகள் கட்சியைச் சேர்ந்தவர்களும் ஈடுபட்டனர். போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி கலைந்து செல்ல வலியுறுத்தினர்.

ஆனால், அதனையும் மீறி முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் உட்பட அனைவரையும் கைது செய்து பேருந்தில் ஏற்றி தனியார் மண்டபத்திற்கு அனுப்பி வைத்தனர். இந்நிகழ்வால் ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
கடந்த 10-ம் தேதி இரவு கள்ளிப்பாளையம் பகுதியில் இருதரப்பினருக்கு ஏற்பட்ட மோதலில் போலீசார் 3 பேர் கொடுத்த புகாரின் அடிப்படையில் தாழ்த்தப்பட்டோர் வன்கொடுமை சட்டம் உள்பட மூன்று வழக்காகப் பதிவு செய்தனர். இதில், தாழ்த்தப்பட்டோர் மக்கள் 50 பேர் மீதும், மற்றொரு தரப்பு இருவர் மீது மட்டுமே வழக்குப் பதிவு செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.