கோவை : பெட்ரோலிய பொருட்களில் இருந்து எடுக்கப்படும் வாசனையற்ற இன்டஸ்டிரியல் ஆயில் என்ற எண்ணெய்யினை, சமையலுக்கு பயன்படுத்தும் எண்ணெய் பொருட்களில் அதிகளவு கலக்கின்றனர் என தமிழ்நாடு கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி குற்றம்சாட்டியுள்ளார்.

தமிழ்நாடு கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி கோவை பத்திரிகையாளர் மன்றத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது, அவர் பேசியதாவது :- நீர் நிர்வாகத்தில் தவறுகள் நடக்காமல் இருக்கவும், பாசன உரிமைகளை மீட்கவும் ஈரோட்டில் வரும் 23-ம் தேதி கீழ்பவானி பாசன பாதுகாப்பு மாநாடு நடத்தப்பட உள்ளது. கீழ்பவானி பாசன பாதுகாப்பு மாநாட்டில் ஒரு லட்சம் பேர் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
தேசிய அளவில் நதிநீர் பிரச்சினைகளை தீர்க்க ஒரே மையம் அமைக்கப்பட இருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. ஆனால், காவிரி மேலாண்மை ஆணையத்தைப் பொறுத்தவரை உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை முழுமையாக காவிரி மேலாண்மை ஆணையமும், அரசுகளும் செயல்படுத்தவில்லை. இது தொடர்பாக உடனடியாக மறுசீராய்வு மனுவை தமிழக அரசு தாக்கல் செய்ய வேண்டும். 28 ஆண்டுகளில் நீதிமன்ற தீர்ப்பின்படி, தண்ணீர் வழங்கப்படவில்லை. தற்போது, கர்நாடக அரசியல் நிலவி வரும் குழப்பத்தால் காவிரி விவகாரத்தில் எந்த மாற்றமும் ஏற்படப்போவதில்லை. மேகதாதுவில் கர்நாடக அரசு அண கட்ட முயற்சி செய்து வருகிறது. அவ்வாறு அணை கட்டினால் தமிழ்நாடு நெற்களஞ்சியம் கடுமையான பாதிக்கப்படும். கடை மடை உரிமை பாதிக்கப்படும்.
இந்த ஆண்டு 17 சதவீதம் மழை அளவு குறைந்து இருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி இருக்கின்றது. இதனால், தண்ணீர் பஞ்சம் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக, 2020-ல் உணவு பொருட்களின் விலை உயரும். நாட்டில் ஏற்பட்டுள்ள மிகப்பெரும் நெருக்கடிகளுக்கு காரணம் மக்கள் தொகை பெருக்கமே ஆகும். பாண்டியாறு - புன்னம்புழா திட்டத்தை உடனடியாக நிறைவேற்றிட வேண்டும். இதை நிறைவேற்றினால் தமிழகத்திற்கு 14 டி.எம்.சி. தண்ணீர் கிடைக்கும். முதற்கட்டமாக, பாண்டியாற்றை மாயாற்றுடன் இணைக்க வேண்டும். கோதாவரி - காவிரி திட்டத்திற்கு முன்னோடியாக பாண்டியாறு - மாயாறு ஆறுகளை இணைக்க வேண்டும். இந்த திட்டத்தை செயல்படுத்த குறைந்த செலவே ஆகும். மேலும், நீர் பாசனத்திற்காக என தனியாக ஒரு அமைச்சர் நியமனம் செய்யப்பட வேண்டும்.
பெட்ரோலிய பொருட்களில் இருந்து எடுக்கப்படும் வாசனையற்ற இன்டஸ்டிரியல் ஆயில் என்ற எண்ணெய்யினை சமையலுக்கு பயன்படுத்தும் எண்ணெய் பொருட்களில் அதிகளவு கலக்கின்றனர். இதை மக்கள் பயன்படுத்தும் நல்லெண்ணெய், கடலெண்ணைய் போன்ற பல எண்ணெய்களில் கலக்கின்றனர். இந்த கலப்படம் தொடர்ந்து பல இடங்களில் நடைபெற்று வருகின்றது. இதனால், மக்களின் உடல்நிலை பாதிக்கப்படுகின்றது, என தெரிவித்தார்.