கோவை : கரும்புக்கடையில் ஆரம்ப சுகாதார நிலையம் உள்பட பல்வேறு அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும் என வலியுறுத்தி கோவை மாவட்ட மற்றும் மாநகர நிர்வாகத்திடம் ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் அமைப்பினர் மனு அளித்துள்ளனர்.

இது தொடர்பாக அவர்கள் அளித்துள்ள மனுவில் குறிப்பிட்டிருப்பதாவது :- கோவை மாநகரின் கரும்புக்கடை மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் ஐம்பதாயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கிறார்கள். பல்வேறு அடிப்படை தேவைகளுக்காக இவர்கள் நீண்ட தூரம் செல்ல வேண்டி உள்ளது. எனவே, இங்குள்ள தொடக்கப்பள்ளியை மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்த வேண்டும் அல்லது புதிய மேல்நிலை பள்ளியினை உக்கடம் கழிவுநீர்ப் பண்ணை அருகே இருக்கும் அரசு நிலத்தில் கட்டிடவேண்டும், வங்கி கிளை அமைத்திட வேண்டும், நூலகம் மற்றும் e-நூலகம் அமைத்திட வேண்டும், சிறுவர் விளையாட்டுப் பூங்கா அமைத்திட வேண்டும், ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் பிரசவ நிலையம் அமைத்திட வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
மேலும், கரும்புக்கடை பகுதியில் ஆக்கிரமிப்புகளை அகற்றி போக்குவரத்து நெரிசலை சீர்செய்திட வேண்டும், நொய்யல் ஆற்றில் ஆக்கிரமிப்புகளை அகற்றிடவும், மாசுபடுவதை தடுத்திட வேண்டும், எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பாட்ட சிறுவர்களுக்கான காப்பகம் அமைத்திட வேண்டும், அரசு மருத்துவமனையில் அமரர் ஊர்திகளின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், இயன்றவர்களுக்கு அவர்களே சடலங்களை எடுத்துச்செல்ல அனுமத்திட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளும் மாவட்ட நிர்வாகத்தின் முன்பு வைக்கப்பட்டது.

இதேபோல, மேற்கண்ட கோரிக்கைகள் அடங்கிய மனு கோவை மாநகராட்சியின் புதிய ஆணையாளராக பதவியேற்றுள்ள ஷ்ரவன் குமாரிடமும் ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் கோவை பெருநகரக் கிளை சார்பில் நேற்று அளிக்கப்பட்டது.