கோவை : மேட்டுப்பாளையம் அருகே அன்னூர் கத்தோலிக் சிரியன் வங்கியின் பின்பக்க கதவை உடைத்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட போது, அபாய சங்கு ஒலி எழுப்பியதால் கொள்ளையர்கள் தப்பி ஓடினர்.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தை அடுத்த அன்னூரில் அவிநாசி செல்லும் சாலையில் கத்தோலிக்க சிரியன் வங்கி செயல்பட்டு வருகிறது. இந்த வங்கியில் அன்னூர் சுற்றுவட்டாரப் பகுதியில் உள்ள மக்கள் ஏராளமானோர் வங்கி கணக்கு வைத்துள்ளனர். நேற்று வழக்கம்போல், வங்கி நேரம் முடிந்த பின்னர் ஊழியர்கள் வங்கியைப் பூட்டிவிட்டு சென்றுள்ளனர். இந்நிலையில் ,இன்று அதிகாலை 3.30 மணி அளவில் இந்த வங்கியில் இருந்து அபாய ஒலி எழும்பியுள்ளது. இதனை கேட்ட அருகில் உள்ளவர்கள் இது குறித்து அன்னூர் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து, அங்கு வந்த காவல்துறையினர் வங்கி ஊழியர்கள் உதவியுடன் உள்ளே சென்று பார்த்த போது, வங்கியின் பின்புற ஜன்னல் கம்பி அறுக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும், வங்கியின் கதவுகளையும், ஐன்னல்களையும் உடைத்து வங்கியின் உள்ளே நுழைந்து கொள்ளையடிக்க முயன்றதும் தெரிய வந்தது. பின்னர், அங்கு பதிவான கைரேகைகளை கொண்டும், கண்காணிப்பு கேமிராவில் பதிவான காட்சிகளின் அடிப்படையிலும் கொள்ளையர்களை போலீசார் தேடி வருகின்றனர். அபாய ஒலி வங்கியில் எழுப்பியதால் வங்கியில் வைக்கப்பட்டிருந்த பல லட்சம் ரூபாய் பணம் தப்பியது.
கருமத்தம்பட்டி துணை கண்காணிப்பாளர் பாஸ்கரன் தலைமையிலான போலீசார் கொள்ளை முயற்சி குறித்து வழக்குப்பதிவு செய்து வங்கி அதிகாரிகளிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். அன்னூர் பகுதியில் கடந்த மாதம் 26 ம் தேதி இதே முறையில் ஆந்திரா வங்கியிலும் கொள்ளை முயற்சி நடைபெற்றுள்ளதால், இந்த இரண்டு சம்பவங்களிலும் ஒரே நபர்கள்தான் ஈடுபட்டனரா..? என்ற கோணத்திலும் அன்னூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தொடர்ந்து வங்கிகளை குறிவைத்து திருட்டு சம்பவங்கள் அன்னூர் பகுதியில் அரங்கேறி வருவதால் பொதுமக்கள் கலகத்தில் உள்ளனர். எனவே, காவல்துறை உரிய ரோந்து பணிகளை மேற்கொண்டு குற்றசம்பவங்களை தடுக்க பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.