நீலகிரி : நீலகிரி மாவட்டம் உதகை அருகே உள்ள காமராஜர் அணையில் பழம்பெரும் சிலைகள் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

உதகை - மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள காமராஜர் அணையில் இன்று வழக்கம் போல் இளைஞர்கள் சிலர் மீன்பிடித்துக் கொண்டிருக்கும் பொழுது சிலைகள் கண்ணில் தென்பட்டு உள்ளது. இதையடுத்து, அந்த இளைஞர்கள் தகவல் கொடுத்ததன் பேரில், உதகை கோட்டாட்சியர் சுரேஷ் அப்பகுதிக்கு சென்று பார்வையிட்டார். அப்போது, நவகிரக பழமை வாய்ந்த கல் சிலைகள் அந்த அணையில் இருந்து எடுக்கப்பட்டன.

இது பற்றி இளைஞர்கள் கூறும்போது, “நாங்கள் மீன்பிடித்துக் கொண்டிருக்கும் பொழுது தென்பட்ட சிலைகளை மட்டும் நாங்கள் பார்த்து எடுத்துள்ளோம். இன்னும் அணையில் சிலைகள் இருக்க வாய்ப்புள்ளதாக தெரிகிறது. இதை மாவட்ட நிர்வாகம் சம்பந்தப்பட்ட துறை மூலம் சிலைகள் உள்ளனவா..? என பார்க்க வேண்டும்,” என தெரிவித்தனர்.

தொடர்ந்து, கோட்டாட்சியர் சுரேஷ் அவர்கள் கூறும் பொழுது, இது பழங்காலத்து கல்சிலைகள் தான். தற்பொழுது, நீர் இந்த அணையில் குறைவாக காணப்படுவதால், இந்த சிலைகள் தென்பட்டுள்ளன. இது தற்போது வட்டாட்சியர் அலுவலகம் கொண்டு செல்லப்பட்டு, பின்பு எத்தனை ஆண்டுகள் பழமை வாய்ந்த சிலைகள் என ஆராய்ந்து அதன் பின்னர் மாவட்ட ஆட்சியர் முன்பு ஆய்வு செய்யப்படும், என தெரிவித்தார்.
அணையில் தென்பட்ட இந்த பழங்காலத்து நவகிரக சிலைகளால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.