கோவை : மத்திய அரசின் குடிநீர் மற்றும் சுகாதாரத் துறையின் ஜல் சக்தி அபியான் திட்டத்தின் நீர் மேலாண்மை தொடர்பான ஆலோசனை கூட்டம் மாவட்ட ஆட்சியர் கு. ராசாமணி தலைமையில் நடைபெற்றது.

கோவை ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று நடந்த இந்தக் கூட்டத்தில் இன்று மத்திய அரசின் ஜல்சக்தி அபியான் இயக்கத்தின் சார்பில் கோவை மாவட்டத்திற்கு நியமிக்கப்பட்டுள்ள உயர் அலுவலர்களான மத்திய வேளாண்மை, கூட்டுறவு மற்றும் விவசாயிகள் நல அமைச்சகத்தின் இணைச் செயலாளர் தீபானந் சாஹு, கொள்முதல் அமைச்சகத்தின் இயக்குநர் ஜெயசீலன், புவி அறிவியல் அமைச்சகத்தின் இணைச் செயலாளர் அஜீத் குமார் டங் டங், நுகர்வோர் மற்றும் பாதுகாப்புத் துறையை இணைச் செயலாளர் அபய் குமார், மத்திய நிலத்தடி நீர் ஆணையத்தின் விஞ்ஞானிகள் மினிசந்திரன், எம்.செந்தில்குமார், .டி. கனகசுந்தர், .வி.எஸ்.ஜோஷி, கே.அனிஷா, என்.வினய்சந்திரன், மத்திய நீர் வள ஆணையம் இயக்குநர் எஸ்.கே.தாஸ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் கு. ராசாமணி பேசியதாவது :- மத்திய அரசின் குடிநீர் மற்றும் சுகாதார துறை மூலமாக செயல்படுத்தப்படும் ஜல் சக்தி அபியான் என்ற நீர் மேலாண்மை இயக்கமானது, கோவை மாவட்டத்தில் முதல் கட்டமாக ஜுலை 01-ம் தேதி முதல் செப்., 15-ம் தேதி வரையிலும், இரண்டாம் கட்டமாக அக்.,02-ம் தேதி முதல் நவம்பர் 30 வரை நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதன் மூலம், அனைத்து ஊரக நகர்ப்புற பகுதிகளிலும் தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவ மழைக்காலங்களில் கிடைக்கும் நீரினை சேமித்தல், நீர்நிலைகளைப் பாதுகாத்தல், வளர்ச்சி அடைதல், சிறப்பான நீர் பாசனத் திட்டம் உருவாக்குதல், வறட்சி பகுதிகளை மேம்படுத்துதல், ஆழ்துளைக் கிணறுகளைப் புதுப்பித்தல், மீண்டும் பயன்பாட்டிற்குக் கொண்டு வருதல், காடுகளை உருவாக்குதல் மற்றும் மழைநீர் சேகரிப்பு தொடர்பான பணிகளை நிர்ணயிக்கப்பட்ட கால அளவில் மேற்கொண்டு முடிக்கவும், தன்னிறைவு அடைய செய்யும் வகையிலும் திட்டமிடப்பட்டுள்ளது.
கோவை மாவட்டத்தில் மத்திய அரசின் மகாத்மா காந்தி தேசி ஊரக வேலை உறுதி திட்டத்தின் மூலம் அனைத்து ஊரக பகுதிகளிலும் முன்னேற்பாடு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதனடிப்படையில், தோராயமாக 24,160 ஏக்கர் விவசாய நிலங்களில் மண் வரப்பு கட்டும் பணிகள் மேற்கொள்ள 7,494 பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டு 3,645 பணிகள் முடிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 3,849 பணிகளும் முடிக்கப்படும்போது இதன் மூலம் மழைநீர் பூமிக்குள் சென்று 6,764 கோடி லிட்டர்(2.4 டிஎம்சி) நிலத்தடி நீர் மட்டம் வெகுவாக உயரும் வாய்ப்பு உள்ளது.
மேலும், ஏற்கனவே கோவை மாவட்டத்தில் குளம், ஏரி, குட்டைகள் தூர்வாரப்பட்டதன் காரணமாக நிலத்தடி நீர் மட்டம் 2017-2018 ம் ஆண்டில் 29.76 மீட்டராகவும், 2018-19 ஆம் 22.31 மீட்டர் என்ற அளவில் இருந்து தற்போது 17.62 மீட்டராக உயர்ந்துள்ளது. நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்துள்ளதன் காரணமாக விவசாயிகள் பாசனத்திற்கு கிணற்றிலிருந்தும், வழக்கமான நீர் நிலைகளிலிருந்தும் பயன்படுத்திக் கொள்கின்றனர். மேலும், ஊரகப் பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள ஆழ்குழாய் கிணறுகளில் நீரின் அளவு அதிகரித்துள்ளது. கோவை மாவட்டத்தில் ஜல் சக்தி அபியான் திட்டத்தின் மூலம் நீர் சேகரித்தல், பாதுகாத்தல், சிக்கனமாகப் பயன்படுத்துதல் பணிகளை சிறப்பாக செயல்படுத்த அனைத்து பொதுமக்களும் ஒத்துழைப்பு நல்குவதோடு தனிநபர் இல்லங்களில் மழைநீர் சேமிப்பு ஆதாரங்களை உருவாக்க வேண்டும், என தெரிவித்தார்.