கோவை : கோவை மாநகராட்சியில் ஜி.பி.எஸ். மற்றும் QR கோடுகளைப் பொருத்திய இயற்கை கழிவுகளை வீடுகளுக்குச் சென்று சேகரிக்கும் வாகனங்கள் சோதனை ஓட்டமாக இயக்கப்பட்டு வருகிறது.
கோவை : கோவை மாநகராட்சியில் ஜி.பி.எஸ். மற்றும் QR கோடுகளைப் பொருத்திய இயற்கை கழிவுகளை வீடுகளுக்குச் சென்று சேகரிக்கும் வாகனங்கள் சோதனை ஓட்டமாக இயக்கப்பட்டு வருகிறது.
கோவை மாநகராட்சிக்குட்பட்ட 9 வார்டு பகுதியான கவுண்டம்பாளையத்தில் உள்ள வீடுகளில் சேகரமாகும் இயற்கை கழிவுகளை சேகரிக்கும் இரு வாகனங்களில் ஜி.பி.எஸ். மற்றும் அந்த வார்டில் உள்ள ஒவ்வொரு வீதிகளிலும் QR கோடுகள் பொருத்தப்பட்டுள்ளது. குறிப்பிட்ட வார்டில் சேகரித்து வரும் இயற்கை கழிவுகளை கவுண்டம்பாளையத்தில் உள்ள நுண் உரமாக்குதல் மையத்தில் (MCC) கொண்டு சேர்க்கப்படுகிறது. இந்த நுண் உரமாக்குதல் மையம் சோதனை ஓட்டத்திற்கு பிறகு, நாளை முதல் பயன்பாட்டிற்கு வருகிறது. கோவை மாநகராட்சியின் குப்பை மேலாண்மை திட்டத்திற்கும், வெள்ளலூர் குப்பை கிடங்கில் உள்ள குப்பை மலைகளைக் குறைக்கவும் இந்த நுண் உரமாக்குதல் மையம் முக்கிய பங்காற்ற இருக்கிறது.
இந்த சோதனை ஓட்டத்திற்குப் பிறகு, இயற்கை கழிவுகளை சேகரிக்க கூடுதல் வாகனங்கள் இயக்க வேண்டுமா..? உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளுக்கு தீர்வு காண முடியும். உலர் கழிவுகள் வாரத்திற்கு இருமுறை சென்ற சேகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
"ஜி.பி.எஸ். மற்றும் QR கோடுகளைப் பொருத்திய இரு வாகனங்கள் கோவை மாநகராட்சி சார்பில் சோதனை ஓட்டமாக இயக்கப்பட்டு வருகிறது. இந்த வாகனங்கள் குப்பைகளை சேகரிக்கச் செல்லும் ஒவ்வொரு வீதியின் நுழைவிலும் இந்த QR கோடுகளைப் பயன்படுத்தும். மேலும், ஜி.பி.எஸ். கருவியின் மூலம் வாகனங்கள் எங்கு இருக்கிறது என்பதையும் அறிய முடியும். முதற்கட்டமாக 4,000 குடியிருப்புகளைக் கொண்ட 9-வது வார்டு பகுதியில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. இதில், சேகரிக்கப்படும் இயற்கை கழிவுகள் கவுண்டம்பாளையத்தில் உள்ள நுண் உரமாக்குதல் மையத்தில் கொண்டு சேர்க்கப்படும். 4 முதல் 5 டன் வரையிலான இயற்கை கழிவுகள் சேர்ந்த பிறகு உரமாக்கும் பணிகள் நடைபெறும். சோதனை ஓட்டத்திற்குப் பிறகு, கூடுதல் வாகனங்கள் இயக்கப்பட வேண்டுமா என்பது குறித்து தெரிய வரும்," என்கிறார் கோவை மாநகராட்சியின் மூத்த அதிகாரி ஒருவர்.