கோவை : உலக மக்கள் தொகை தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சியர் கு. ராசாமணி கொடியசைத்து துவக்கி வைத்தார்.

உலக மக்கள் தொகை தினத்தினை முன்னிட்டு மக்கள் நலவாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை சார்பில் நடைபெற்ற விழிப்புணர்வு பேரணியில், மாவட்ட வருவாய் அலுவலர் ராமதுரை முருகன், துணை இயக்குநர் (சுகாதாரம்) பானுமதி, இணை இயக்குநர் (சுகாதாரம்) கிருஷ்ணா மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். நர்சிங் கல்லூரி மாணவ, மாணவிகள் கலந்து கொண்ட இப்பேரணி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தொடங்கி மாவட்ட குடும்ப நலம் மற்றும் சுகாதாரத் துறை அலுவலகத்தில் முடிவடைந்தது.
பின்னர் மாவட்ட ஆட்சியர் கூறியதாவது :- உலக மக்கள் தொகை தினம் ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 11-ம் தேதி அனுசரிக்கப்படுகிறது. இதன் மூலம் உலக மக்கள் தொகை பெருக்கத்தின் மூலம் ஏற்படும் பிரச்சினைகள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. 1989-ம் ஆண்டில் ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தி திட்டத்தின் ஆளும் குழுவால் ஜூலை 11-ம் நாள் உலக மக்கள் தொகை தினமாக அறிவிக்கப்பட்டது. குடும்பக் கட்டுப்பாட்டின் முக்கியத்துவம், பாலின சமத்துவம், வறுமை, தாய்வழி சுகாதாரம் மற்றும் மனித உரிமைகள் போன்ற பல்வேறு மக்கள் தொகை பிரச்சினைகளில் மக்கள் விழிப்புணர்வை அதிகரிப்பதை உலக மக்கள் தொகை தினம் நோக்கமாகக் கொண்டுள்ளது.
நமது தாய்நாட்டின் மொத்த மேம்பாட்டிற்கும், தாய்மார்களின் நல்வாழ்விற்கும் குழந்தைகளின் ஒளிமயமான எதிர்காலத்திற்கும் மக்கள் தொகை பெருக்கத்தினைக் கட்டுப்படுத்துதல் முதன்மையானதாகும். சிறுகுடும்ப நெறி, திருமணத்திற்கேற்ற வயது, முதல் குழந்தையை தாமதப்படுத்த மேற்கொள்ள வேண்டிய குடும்ப நலமுறைகள், முதல் குழந்தைக்கும் இரண்டாவது குழந்தைக்கும் இடையே தேவையான இடைவெளி, ஒரு பெண் கருவுற்ற காலத்தில் வீட்டில் மேற்கொள்ள வேண்டிய சாதகமான சூழ்நிலையை உருவாக்குதல் தாய் சேய் நலத்தை பாதுகாத்தல், பெண் கல்வியை மென்மேலும் ஊக்குவித்தல், ஆணும் பெண்ணும் சமம் என்பதற்கு செயல் வடிவம் கொடுத்தல், பெண் சிசுக் கொலையைத் தடுத்தல் மக்கள் தொகை பெருக்கத்தினால் ஏற்படும் தாக்கத்தை குறைத்தல், சுற்றுப்புற சூழல் பாதிப்பை தடுத்தல், மரம் வளர்ப்பதை ஊக்குவித்தல், வறுமை ஒழிப்பு போன்ற செய்திகளை அனைவருக்கும் எடுத்துக் கூறி பொதுமக்களிடத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும், என தெரிவித்தார்.