3 மாதங்களுக்குப் பிறகு கோவை குற்றாலம் நாளை திறப்பு

கோவை : வறட்சி, பராமரிப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக மூடப்பட்டிருந்த கோவை குற்றாலம் 3 மாதங்களுக்குப் பிறகு நாளை திறக்கப்படுகிறது.

கோவை : வறட்சி, பராமரிப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக மூடப்பட்டிருந்த கோவை குற்றாலம் 3 மாதங்களுக்குப் பிறகு நாளை திறக்கப்படுகிறது. 

கடும் வறட்சியின் காரணமாக கடந்த மார்ச் 25-ம் தேதி சூழல் சுற்றுலாப் பகுதியான கோவை குற்றாலம் மூடப்பட்டது. மேலும், பருவமழை பொய்த்துப் போனதால், நீடித்த வறட்சி காரணமாக குற்றாலத்தின் நீர்மட்டம் நாளுக்கு நாள் குறைந்து கொண்டே சென்றது. இந்த சூழலில் வனப்பகுதிகளில் கடும் வறட்சி  நிலவுவதால், கோவை குற்றாலம் உள்பட பல்வேறு நீர்நிலைகளைத் தேடி யானை உள்ளிட்ட வன விலங்குகள் வரத் தொடங்கின. இதனால், சுற்றுலாப் பயணிகளின் வருகைக்கு தடை விதிக்கப்பட்டது. 

இந்த சூழலைப் பயன்படுத்தி சுற்றுலாப் பயணிகள் குளிக்கும் பகுதி சீரமைப்பு மற்றும் சாலைகள் சீரமைத்தல் உள்ளிட்ட பல்வேறு சீரமைப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. இந்த நிலையில், தென்மேற்கு பருவமழையினால் கோவை குற்றாலம் ஓரளவிற்கு நீர்வரத்தைப் பெற்றுள்ளதோடு, சீரமைப்பு பணிகளும் நிறைவடைந்த நிலையில், 108 நாட்களுக்குப் பிறகு கோவை குற்றாலம் நாளை (ஜுலை 12) திறக்கப்பட இருப்பதாக கோவை மாவட்ட வன அதிகாரி டி. வெங்கடேஷ் தெரிவித்துள்ளார்.

Newsletter

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...

கோவையில் தீவிர டெங்கு கொசு ஒழிப்பு: வீடு வீடாக ஆய்வு மற்றும் புகை மருந்து தெளிப்பு பணிகள்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி, குனியமுத்தூர் கோகுலம் நகர் மற்றும்...

FMSCI இந்திய தேசிய ராலி ஸ்பிரிண்ட் சாம்பியன்ஷிப் வென்ற SRIT மாணவர் கதிரொளி

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி இயந்திரவியல் துறை மூன்றாம் ஆண்டு மாணவர் எஸ். கதிரொளி, FMSCI இந்திய தேசிய ராலி ஸ்ப...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையில் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 38.44 அடியாகவும் உயர்ந்துள்ளது....

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஜூன் 26...

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...