பாலியல் வன்கொடுமைக்கு ஆளான வடமாநில பெண் மாட்டுத் தொழுவத்தில் தஞ்சம் : பாதுகாப்பு கோரி ஆட்சியரிடம் மனு

திருப்பூர் : திருப்பூரில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான வடமாநில பெண் தொழிலாளி தனது சகோதரர்களுடன் மாட்டுத் தொழுவத்தில் தஞ்சமடைந்த நிலையில், உயிர் பாதுகாப்பு கோரி திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளார்.

திருப்பூர் : திருப்பூரில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான வடமாநில பெண் தொழிலாளி தனது சகோதரர்களுடன் மாட்டுத் தொழுவத்தில் தஞ்சமடைந்த நிலையில், உயிர் பாதுகாப்பு கோரி திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளார். 

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த பருவாய் பகுதியில் செந்தில் என்பவருக்கு சொந்தமான வெங்கடேஷ்வரா மில்ஸ் என்ற நூற்பாலை செயல்பட்டு வருகிறது. இங்கு வடமாநில தொழிலாளர்கள் அதிகளவில் பணியாற்றி வருகின்றனர். இந்த நிலையில், கடந்த திங்கட்கிழமை அன்று மாவட்ட ஆட்சியர் குறைதீர்ப்பு முகாமிற்கு நூற்பாலையில் பணியாற்றி வரும் ஒரிசா மாநிலம் கட்டாக் மாவட்டத்தை சேர்ந்த சுமித்ரா என்ற இளம்பெண் கடந்த 8-ம் தேதி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு ஒன்றை அளித்திருந்தார். 



அந்த மனுவில், இளம்பெண் சுமித்ரா, தனது இரு சகோதரர்களான பிரபு, சனு ஆகியோருடன் வெங்கடேஷ்வரா மில்ஸ் நூற்பாலையில் கடந்த 6 மாதமாக பணியாற்றி வந்தேன். தங்களுக்கு முழுமையான ஊதியம் வழங்காமல் கொத்தடிமை போல நடத்தி வந்தனர். நூற்பாலையின் உரிமையாளர் செந்தில், எனக்கு தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்தார். வட மாநிலத்தில் இருந்து வந்து பணியாற்றுவதால், தான் சொல்வதைக் கேட்க வேண்டும் என்றும், இல்லை என்றால் இங்கு வாழமுடியாது என மிரட்டல் விடுத்தார். தங்களின் ஊதியத்தைப் பெற்று தருவதோடு பாலியல் தொல்லை கொடுத்து வரும் நூற்பாலை உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், என அதில் குறிப்பிட்டிருந்தார். 

இந்த நிலையில், நூற்பாலை உரிமையாளர் தரப்பில் இருந்து தங்களது உயிருக்கு ஆபத்து ஏற்படுமோ என்கிற அச்சத்தில் அங்கிருந்து தப்பிச் சென்று அருகே இருந்த மாட்டுத் தொழுவத்தில் தனது சகோதரர்களுடன் தஞ்சம் அடைந்துள்ளார். இதனையடுத்து, தகவலறிந்த சிலர் அவர்களிடம் பேசி அவர்களது நண்பர்கள் வீட்டில் மூவரையும் தங்க வைத்துள்ளனர். இதனையடுத்து, இன்று திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திலும் புகார் மனு அளித்தனர்.

Newsletter

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...

கோவையில் தீவிர டெங்கு கொசு ஒழிப்பு: வீடு வீடாக ஆய்வு மற்றும் புகை மருந்து தெளிப்பு பணிகள்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி, குனியமுத்தூர் கோகுலம் நகர் மற்றும்...

FMSCI இந்திய தேசிய ராலி ஸ்பிரிண்ட் சாம்பியன்ஷிப் வென்ற SRIT மாணவர் கதிரொளி

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி இயந்திரவியல் துறை மூன்றாம் ஆண்டு மாணவர் எஸ். கதிரொளி, FMSCI இந்திய தேசிய ராலி ஸ்ப...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையில் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 38.44 அடியாகவும் உயர்ந்துள்ளது....

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஜூன் 26...

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...