குன்னூர் சேலாஸ் பகுதியில் தூய்மை இந்தியா திட்டப் பணிகள் தொடக்கம்

நீலகிரி : குன்னூர் அருகே உள்ள சேலாஸ் பகுதியில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் சேலாஸ் நகரப் பகுதியில் தூய்மை பணியை மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா துவக்கி வைத்தார்.

நீலகிரி : குன்னூர் அருகே உள்ள சேலாஸ் பகுதியில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் சேலாஸ் நகரப் பகுதியில் தூய்மை பணியை மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா துவக்கி வைத்தார்.



பின்னர், நிகழ்ச்சியில் பேசிய அவர், நாம் தூய்மையாக இருந்தால்தான் நமது குழந்தைகள் சுகாதாரத்துடன் வாழ்வார்கள், என்றார். இதனைத் தொடர்ந்து, உலிக்கல் பேரூராட்சிக்குட்பட்ட ஆதிவாசி கிராமமான செங்கல்புதுாரில் மனுநீதி நாள் மற்றும் மக்கள் தொடர்பு திட்ட முகாம் நடைபெற்றது. இதில், மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா, ஆதிவாசி மக்களிடத்தில் தன்னம்பிக்கையாக வாழ வேண்டும் என்றும், தாய்மார்கள் கர்ப்ப காலத்தில் மருத்துவ பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் எனவும், மூட பழக்கவழக்கங்களைக் கைவிட்டு மருத்துவர்கள் மற்றும் அதிகாரிகளை அணுகி தங்களின் குறைகளை அவர்களிடம் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டுக் கொண்டார். 



மேலும், அப்பகுதியில் உள்ள சாலை ரூ. 50 லட்சம் செலவில் வனத்துறையினரின் ஒப்புதலோடு மேம்படுத்தப்படும் என்றும், ஆதிதிராவிட பழங்குடியினர் சார்பில் ரூ. 11 லட்சம் செலவில் வீடுகளைப் புனரமைக்க நீதி ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். ஆனால், அப்பகுதி மக்கள் எங்களுக்குப் புனரமைக்க வேண்டாம் எனவும், வீடு கட்டி தருமாறு மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை வைத்தனர். இதனை ஏற்ற மாவட்ட நிர்வாகம், புதியதாக 22 வீடுகள் கட்டித் தர ஆவண செய்யப்படும் என உறுதியளித்தது.



இதைத் தொடர்ந்து, அப்பகுதியில் வாழும் மக்களுக்கு சாதி சான்றிதழ், இருப்பிட சான்றிதழ், குடும்ப அட்டை உள்ளிட்டவை வழங்கப்பட்டது. அப்போது,  சேலாஸ் பகுதியில் உள்ள மக்களின் குறைகளை கோரிக்கை மனுக்களாகப் பெற்றுக் கொண்ட ஆட்சியர், உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய்த்துறை அலுவலர் நிர்மலா, குன்னூர் சார் ஆட்சியர் ரஞ்சித்சிங், குன்னூர் வன அலுவலர் கெளதம், குன்னூர் வட்டாட்சியர் தினேஷ் உட்பட பல்வேறு துறையைச் சார்ந்த அரசு அதிகாரிகள், அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...

கோவையில் தீவிர டெங்கு கொசு ஒழிப்பு: வீடு வீடாக ஆய்வு மற்றும் புகை மருந்து தெளிப்பு பணிகள்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி, குனியமுத்தூர் கோகுலம் நகர் மற்றும்...

FMSCI இந்திய தேசிய ராலி ஸ்பிரிண்ட் சாம்பியன்ஷிப் வென்ற SRIT மாணவர் கதிரொளி

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி இயந்திரவியல் துறை மூன்றாம் ஆண்டு மாணவர் எஸ். கதிரொளி, FMSCI இந்திய தேசிய ராலி ஸ்ப...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையில் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 38.44 அடியாகவும் உயர்ந்துள்ளது....

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஜூன் 26...

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...