கோவை : மேட்டுப்பாளையத்தில் வறட்சி காரணமாக தண்ணீர் இல்லாததால் வாழை சாகுபடி வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் வாழை விவசாயம் பிரதானமாக இருந்து வருகிறது. கதிளி, பூவன், நேந்திரன், செவ்வாழை என பல வகையான வாழைகள் பயிர் செய்யப்பட்டு கேரள, ஆந்திரா போன்ற அண்டை மாநிலங்களுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. மேட்டுப்பாளையத்தின் புறநகர் பகுதிகளான காரமடை, சிறுமுகை, வெள்ளியங்காடு, பள்ளேபாளையம், அன்னூர் உள்ளிட்ட பகுதிகளில் பல ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் இந்த வாழை சாகுபடி நடைபெற்று வந்த நிலையில், கடந்த ஓராண்டிற்கும் மேல் நிலவும் கடுமையான வறட்சி காரணத்தினால் வாழை சாகுபடி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
பவானி ஆறு ஓடும் கரையோரப் பகுதிகளை தவிர புறநகர் பகுதிகளில் பெரும்பாலும் கிணறு மற்றும் ஆழ்குழாய் கிணறுகளின் தண்ணீரினை பயன்படுத்தியே வாழை விவசாயம் நடைபெற்று வந்த நிலையில், தற்போது ஏற்பட்டுள்ள வறட்சியால் கிணறு மற்றும் ஆழ்குழாய் கிணறுகளில் தண்ணீர் இன்றி வறண்டு வருவதால் பயிர் செய்யப்பட்டுள்ள வாழைகள் தண்ணீர் இன்றி காய்ந்து கருகி வருகிறது. ஏக்கர் ஒன்றிற்கு ரூ. 20,000 முதல் ரூ. 25,000 வரை முதலீடு செய்து வாழை சாகுபடி செய்த நிலையில், எதிர்பார்த்தபடி தென்மேற்கு பருவமழையும் இல்லாமல் போனதால், விவசாயிகள் செய்வதறியாது கவலையடைந்துள்ளனர்.

மேலும், இந்தாண்டு புதியதாக வாழை நடவு செய்ய விவசாயிகள் ஆர்வம் காட்டவில்லை. இதனால், பல ஏக்கர் விளைநிலங்களும் தண்ணீர் இன்றி தரிசாகவே காணப்படுகிறது. அதேசமயத்தில், இருக்கும் கொஞ்சம் நீரினை பயன்படுத்தி குறைந்த அளவில் வாழை பயிரிட்டுள்ள விவசாயிகளுக்கும் அதற்கு ஏற்ற உரிய விலை கிடைக்காத காரணத்தால் விவசாயிகள் கடும் ஏமாற்றம் அடைந்துள்ளனர். எனவே, புறநகர் பகுதிகளில் உள்ள விவசாயிகளும் பயனடையும் வகையில் நிலத்தடி நீர் செறிவூட்டும் திட்டமான அவிநாசி - அத்திக்கடவு போன்ற திட்டங்களை அரசு விரைந்து செயல்படுத்த விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.