நீலகிரி : குன்னூரில் உள்ள தேயிலை தோட்டத்தில் உலா வரும் காட்டெருமைகளை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டும் என தேயிலை தோட்ட தொழிலாளர்கள் வனத்துறையினருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

குன்னூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தேயிலைத் தோட்டங்கள் நிறைந்து காணப்படுகின்றன குறிப்பாக, ரூத் பகுதியில் தனியார் எஸ்டேட் நிறைந்துள்ளன வனத்தை ஒட்டி அமைந்துள்ள தேயிலைத் தோட்டங்களில் காட்டெருமை, கரடி, சிறுத்தை உள்ளிட்ட வனவிலங்குகள் நடமாட்டம் அதிகரித்து காணப்படுகிறது. இந்த நிலையில், நேற்று காலை ப்ரூக் எஸ்டேட் பகுதியில் 25-க்கும் மேற்பட்ட காட்டெருமைகள் குட்டிகளுடன் கூட்டமாக தேயிலை தோட்டத்தில் உலா வந்தன இதனால், தேயிலை பறிக்கும் தொழிலாளர்கள் அச்சத்துடன் பணியை நிறுத்தி விட்டு வெளியேறினர். நீண்ட நேரம் காத்திருந்த தொழிலாளர்கள் காட்டெருமைகள் தேயிலை தோட்டத்தை விட்டு வெளியேறிய பின்பு பணிகளை மேற்கொண்டனர். எனவே, அசம்பாவிதங்கள் நடக்கும் முன்பு இப்பகுதியில் சுற்றித்திரியும் காட்டெருமைகளை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.