கோவை: கோவை மாநகராட்சிக்குட்பட்ட 3,000 வீடுகளின் கழிவு குழாய்கள் முதற்கட்டமாக பாதாள சாக்கடையுடன் இணைக்கும் பணிகள் நிறைவு பெற்றது.

கோவை மாநகராட்சியில் உள்ள 40,000 வீடுகளில் வெளியேறும் கழிவுநீரை பாதாள சாக்கடை திட்டத்தின் கீழ் இணைக்கும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. பாதாள சாக்கடை திட்டத்தின் இணைக்கப்படும் வீடுகளின் கழிவுகள் உக்கடத்தில் உள்ள கழிவுநீர் சுத்திகரிப்பு ஆணையத்தில் சுத்திகரிப்பிற்காக அனுப்பப்படுகிறது. இத்திட்டப் பணிகள் கடந்த 2009-ம் ஆண்டு ஜவகர்லால் நேரு தேசிய நகர்ப்புற புனரமைப்புத் திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்தப் பணிகளை துரிதமாக செய்து முடிப்பதற்காக கோவை மாநகராட்சியின் சார்பில் 3 பொறியாளர்கள் நியமிக்கப்பட்டு, மேற்பார்வை செய்து வருகின்றனர்.
அதன்பலனாக, முதற்கட்டமாக உக்கடம் உள்பட மாநகரின் முக்கிய பகுதிகளில் உள்ள சுமார் 3,000 வீடுகளின் கழிவுகள் உக்கடம் கழிவு நீர் குழாய்க்கு நேரிடையாக சென்றடையும் வகையில், பாதாள சாக்கடை திட்டத்தின் இணைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக கோவை மாநகராட்சி ஆணையர் ஜே. ஷ்ரவன் குமார் கூறுகையில், "பாதாள சாக்கடை திட்டப் பணிகளை விரைந்து முடிப்பதற்காக 3 பொறியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். பழைய பாதாள சாக்கடை திட்டப்பணிகள் துரிதமாக முடிக்கப்பட்டது. புதிதாக இணைக்கப்படும் பகுதிகளில் குழாய்கள் பதிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. பின்னர், முக்கிய குழாயுடன் அவை இணைக்கப்படும். பல இடங்களில் சாக்கடை கழிவுநீர் குழாயை, மழைநீர் வடிகால் குழாயுடன் இணைத்துள்ளனர். அதுபோன்ற இடங்களில் துளையிட்டு எங்களது பணிகளை தொடர்கிறோம். பாதாள சாக்கடை திட்டப் பணிகளை விரைந்து முடிப்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம்," என்றார்.