கோவையில் தனியார் கல்லூரியில் சர்வதேச மக்கள் தொகை தினம் அனுசரிப்பு

கோவை : மத்திய அரசின் தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகத்தின் மக்கள் தொடர்பு கள அலுவலகம், தமிழக அரசின் சுகாதாரம் மற்றும் குடும்பநலத் துறை மற்றும் குனியமுத்தூரில் உள்ள தனியார் கல்லூரியும் இணைந்து உலக மக்கள் தொகை தினத்தை அனுசரித்தது.

கோவை : மத்திய அரசின் தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகத்தின் மக்கள் தொடர்பு கள அலுவலகம், தமிழக அரசின் சுகாதாரம் மற்றும் குடும்பநலத் துறை மற்றும் குனியமுத்தூரில் உள்ள தனியார் கல்லூரியும் இணைந்து உலக மக்கள் தொகை தினத்தை அனுசரித்தது. 



இந்த நிகழ்ச்சியில் சுகாதாரம் மற்றும் குடும்பநலத் துறையின் இணை இயக்குநர் டாக்டர் ஆர். கிருஷ்ணா சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். இதில், அவர் பேசியதாவது :- மக்கள் தொகை வளர்ச்சி அதிகரித்து வருகிறது. பொதுமக்களிடையே இதைப் பற்றிய போதுமான விழிப்புணர்வு உள்ளது. மக்கள் தொகை வளர்ச்சி அதிகரிக்கும் பொழுது உணவு பற்றாக்குறை, வசிக்க இடம், தண்ணீர் தேவை போன்ற பிரச்சனைகள் வரலாம். ஒரு குழந்தை ஒரு மரம் நட்டினால் தண்ணீர் தேவை மற்றும் நல்ல சுகாதார சூழ்நிலையினைப் பெற முடியும். குடும்ப கட்டுப்பாடு சிகிச்சைகள் பெண்களுக்கு உள்ளது போல ஆண்களுக்கும் உள்ளது. இதற்காக சிறப்பு மருத்துவ சிகிச்சை அரசு மருத்துவமனையில் கொடுக்கப்பட்டு வருகிறது. அரசு இதற்காக பல திட்டங்களைக் கொண்டுள்ளது. கருத்தடை பற்றிய விழிப்புணர்வு இளைஞர்கள் தெரிந்திருக்க வேண்டும், எனக் கூறினார்.



இந்த நிகழ்ச்சியில் மக்கள் தொடர்பு கள அலுவலகத்தின் உதவி இயக்குனர் கரீனா தென்கமம் விளக்கவுரை ஆற்றினார். இதில் இக்கல்லூரியின் முதல்வர் பி.பேபி ஷகிலா தலைமையேற்று பேசினார். சூலூர் ஜெம் தொண்டு நிறுவனத்தின் செயலர் ஏ. ரமேஷ் ஆறுமுகம் கலந்து கொண்டு பேசினார். முன்னதாக, மக்கள் தொடர்பு கள அலுவலகத்தின் களப் பணியாளர் எஸ்.ஆர்.சந்திரசேகரன் வரவேற்புரை ஆற்றினார். பின்னர், மக்கள் தொகைப் பற்றிய பேச்சுப் போட்டி மற்றும் கட்டுரைப் போட்டிகள் நடைபெற்றன. இதில், முதல் ஐந்து இடம் பிடித்த மாணவ, மாணவியர்களுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. மேலும், காரைக்காலை சேர்ந்த காரை கலைக்காவலர் கலைக் குழுவினர் மக்கள் தொகைப் பெருக்கத்தினை பற்றிய கலை நிகழ்ச்சியினை நடத்தினர். எ.சி.சி. நிறுவனத்துடன் இணைந்து மதுக்கரை பள்ளியில் இதைப் பற்றிய விழிப்புணர்வினை செய்தனர். 

Newsletter

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...

கோவையில் தீவிர டெங்கு கொசு ஒழிப்பு: வீடு வீடாக ஆய்வு மற்றும் புகை மருந்து தெளிப்பு பணிகள்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி, குனியமுத்தூர் கோகுலம் நகர் மற்றும்...

FMSCI இந்திய தேசிய ராலி ஸ்பிரிண்ட் சாம்பியன்ஷிப் வென்ற SRIT மாணவர் கதிரொளி

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி இயந்திரவியல் துறை மூன்றாம் ஆண்டு மாணவர் எஸ். கதிரொளி, FMSCI இந்திய தேசிய ராலி ஸ்ப...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையில் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 38.44 அடியாகவும் உயர்ந்துள்ளது....

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஜூன் 26...

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...