ஜி.எஸ்.டி. செலுத்துவதில் மோசடி : கோவையில் ஒருவர் கைது

கோவை : ஜி.எஸ்.டி. செலுத்துவதில் சுமார் 2.80 லட்சம் மோசடி செய்ததாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில், ஒருவர் கைது செய்யப்பட்டார்.

கோவை : ஜி.எஸ்.டி. செலுத்துவதில் சுமார் 2.80 லட்சம் மோசடி செய்ததாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில், ஒருவர் கைது செய்யப்பட்டார். 

கோவை சரவணம்பட்டியைச்‌ சேர்ந்த சகோதரர்கள் பி.ராஜமாணிக்கம் மற்றும் சுப்ரமணியம்‌ ஆகியோர்‌ ஸ்ரீ மதுரா டிரேடர்ஸ் என்ற ஐரான் ஸ்கேரப் தொழில் நடத்தி வருகிறார்‌. இவர்களிடம்‌ வேலை செய்த ராசுப்பிள்ளை என்பவரது மகன்‌ பாலசுப்ரமணியம்‌ என்பவர்‌ இவர்களின்‌ கணக்கு வழக்குகளைப் பார்த்து வந்தார். மேலும், பாலசுப்ரமணியம்‌ அவர்‌ தனியாக ஐரான் கம்பெனியை நடத்தி வந்த நிலையில்,‌ 15 வருடங்களுக்கு மேலாக நம்பிக்கைக்குரியவர்‌ என்ற காரணத்தால்‌ ஜி.எஸ்.டி. துறையிடம்‌ கணக்கு வழக்குகளை சமர்பித்து பராமரித்து வந்தார். 

இந்த நிலையில்‌, ராஜமாணிக்கத்தின்‌ ஜி.எஸ்.டி மற்றும்‌ பாஸ்வேர்டை பயன்படுத்தி சகோதரர்களுக்கு தெரியாமல்‌ வேறு நபர்களிடம்‌ வியாபாரம்‌ செய்து ரூ. 2,81,70,000 இழப்பு ஏற்படுத்தி நம்பிக்கை மோசடி செய்ததாக ராஜமாணிக்கம்‌ கோவை மாநகர குற்றப்பிரிவில்‌ புகார்‌ அளித்தனர். அதன் பேரில்,‌ கோவை மாநகர குற்றப்பிரிவில்‌ வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது. 

கோவை மாநகர காவல்‌ ஆணையாளர்‌ சுமித்‌ சரணின்‌ உத்தரவுப்படி, காவல்‌ துணை ஆணையர்‌ பெருமாள்‌ மேற்பார்வையில்‌, உதவி ஆணையர்‌ சந்திரசேகரனின்‌ தலைமையில்‌, காவல்‌ ஆய்வாளர்‌ நாகராஜன்‌, உதவி ஆய்வாளர்‌ ஜமுனா மற்றும்‌ போலீஸார்‌ நேற்று கோவை கொண்டையம் பாளையத்தில்‌ வசித்து வரும்‌ ஆர்‌. பாலகப்ரமணி என்பவரை கைது செய்து நீதிமன்றக்காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

Newsletter

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...

கோவையில் தீவிர டெங்கு கொசு ஒழிப்பு: வீடு வீடாக ஆய்வு மற்றும் புகை மருந்து தெளிப்பு பணிகள்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி, குனியமுத்தூர் கோகுலம் நகர் மற்றும்...

FMSCI இந்திய தேசிய ராலி ஸ்பிரிண்ட் சாம்பியன்ஷிப் வென்ற SRIT மாணவர் கதிரொளி

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி இயந்திரவியல் துறை மூன்றாம் ஆண்டு மாணவர் எஸ். கதிரொளி, FMSCI இந்திய தேசிய ராலி ஸ்ப...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையில் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 38.44 அடியாகவும் உயர்ந்துள்ளது....

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஜூன் 26...

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...