கோவை : கோவை லோட்டஸ் கண் மருத்துவமனையில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக ஓட்டுநர் மற்றும் நடத்துநர்களுக்கான கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது.

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தின் அறிவுரையின்படி அரசு பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துநர்களுக்கு கண் பரிசோதனைகள் முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. இந்த முகாமில் ஓட்டுநர் நடத்துநர்களுக்கு பரிசோதனைகள் செய்யப்பட்டு பாதிப்புகள் இருந்தால், அதற்கான சிகிச்சைகள் கொடுக்கப்படுகிறது. இந்த நிலையில், இன்று தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் கோவை கோட்டத்தின் சார்பில் லோட்டஸ் கண் மருத்துவமனையில் கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் ஓட்டுநர், நடத்துநர் என 140 பேர் பரிசோதனைகள் செய்து கொண்டனர். இந்த பரிசோதனையின் முடிவில் பாதிப்புகள் இருப்பவர்களுக்கு சிகிச்சைகளுக்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

இந்த கண் பரிசோதனை முகாமை கோவை கோட்ட மேலாண்மை இயக்குனர் அன்பு ஆபிரகாம் துவக்கி வைத்தார். மேலும், இந்த நிகழ்வில் உதவி மேலாளர் ராமநாதன், போக்குவரத்து கழக மக்கள் தொடர்பு அதிகாரி இளங்கோ உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.