கோவை : கோவை குப்புசாமி மருத்துவமனையில் மின் கசிவினால் ஏற்பட்ட திடீர் தீ விபத்தை தீயணைப்பு வீரர்கள் போராடி அணைத்தனர்.
கோவை : கோவை குப்புசாமி மருத்துவமனையில் மின் கசிவினால் ஏற்பட்ட திடீர் தீ விபத்தை தீயணைப்பு வீரர்கள் போராடி அணைத்தனர்.
கோவை குப்புசாமி மருத்துவமனையில் உள்ள பின் பகுதியில் டயாலிசிஸ் பிரிவு உள்ளது. இந்தப் பிரிவில் 40க்கும் மேற்பட்ட நோயாளிகள் சிகிச்சை பெறுகின்றனர். இதில், ஒரு பகுதியில் மருந்துக் கிடங்கு உள்ளது. இங்கு சுமார் 8.45 மணியளவில் திடீரென கரும் புகை வெளியாகியது. பின்னர், சிறிது சிறிதாக தீ பரவியது. இதையடுத்து, மருத்துவமனை நிர்வாகத்தினர் அப்பகுதியில் இருந்து நோயாளிகளை அருகே உள்ள பிரிவுகளுக்கு மாற்றினர். மேலும், தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து, உதவி மாவட்ட அலுவலர் தவமணி உத்தரவின் பேரில், நிலைய அலுவலர் ராமச்சந்திரன் தலைமையில் லீடர் கருப்புசாமி உட்பட 12 பேர் கொண்ட தீயணைப்பு வீரர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு வந்தனர். பின்னர், இவர்கள் இரண்டு தண்ணீர் லாரிகள் மூலம் கொண்டு வந்த நீரை பீச்சி தீயணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
இதை தொடர்ந்து, தெற்கு தீயணைப்பு துறை வீரர்களின் முயற்சியால் சுமார் 20 நிமிடத்தில் முழுமையாக அணைக்கப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக பந்தய சாலை போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் மின்கசிவால் தீ விபத்து ஏற்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. சிகிச்சைக்காக தினமும் பல லட்சம் பேர் வந்து செல்லும் இந்த மருத்துவமனையில் ஏற்பட்ட திடீர் தீவிபத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
