கடைசி நிறுத்தம் வரை செல்லும் பயணிகளை பாதியில் இறக்கிவிட்டுச் செல்லும் தனியார் பேருந்துகள் : சீட்டுகளுக்காக அடிதடியில் ஈடுபடும் அவலம்

கோவை : கோவையில் தனியார் பேருந்துகள் கடைசி நிறுத்தம் வரை இயக்காமல், சீட்டு எண்ணிக்கையைக் காரணம் காட்டி பாதியிலேயே பேருந்தை திருப்பி செல்லும் சம்பவங்களையடுத்து, தனியார் பேருந்துகளுக்கு இடையே ஏற்படும் மோதல்கள் பொதுமக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.


கோவை : கோவையில் தனியார் பேருந்துகள் கடைசி நிறுத்தம் வரை இயக்காமல், சீட்டு எண்ணிக்கையைக் காரணம் காட்டி பாதியிலேயே பேருந்தை திருப்பி செல்லும் சம்பவங்களையடுத்து, தனியார் பேருந்துகளுக்கு இடையே ஏற்படும் மோதல்கள் பொதுமக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாவட்டத்தில் இயங்கும் பல்வேறு தனியார் பேருந்துகள், முறையாக பேருந்து நிறுத்தங்களில் பேருந்துகளை நிறுத்துவதில்லை. அதேபோல, 4க்கும் மேற்பட்ட நடத்துனர்கள் பேருந்துகளின் படிகளில் தொங்கிக் கொண்டும், பெண்கள் அமரும் இடத்தில் அமர்ந்தும் பயணிகளுக்கு பல்வேறு தொல்லைகளை கொடுத்து வருகின்றனர். இவர்கள் பேருந்துகளில் வேண்டுமென்றே ஆபாசமான பாடல்களை அதிக சத்தத்தில் வைத்து பயணிகளை முகம் சுளிக்க வைக்கின்றனர். மேலும், அதிவேகமாக பேருந்துகளை இயக்கியும், விதவிதமாக ஹாரன் சத்தத்தை எழுப்பியும் பேருந்துக்கு உள்ளேயும், வெளியேயும் பல்வேறு விதிமீறல்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதை பொதுமக்கள் யாராவது தட்டி கேட்டால் பேருந்துக்குள் இருக்கும் குண்டர்களை கொண்டு மிரட்டுகின்றனர். ஒரு சில இடங்களில் தாக்குதலும் நடைபெறுகிறது. இந்த காரணங்களால் பொதுமக்கள் அனைவரும் தனியார் பேருந்துகளை கண்டால் நமக்கேன் வம்பு என ஒதுங்கி செல்கின்றனர்.



காவல்துறை அதிகாரத்துக்கு உட்பட்டு சில போக்குவரத்து வழக்குகள் பதியப்பட்டாலும், வட்டாரப் போக்குவரத்து அலுவலர்களுக்கே தனியார் பேருந்துகளின் விதிமீறல்களை தடுத்து நிறுத்த அதிகாரம் உள்ளது. ஆனால், கோவை மாவட்டத்தில் உள்ள வட்டார போக்குவரத்து அலுவலர்கள் விதிகளை மீறும் தனியார் பேருந்துகள் மீது உரிய நடவடிக்கைகள் எடுப்பதில்லை. இதனால், தனியார் பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துநர்கள் தங்களுக்கு உண்டான அதிகார தொனியுடன் நினைத்த இடங்களில் பேருந்துகளை நிறுத்தி போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்துகின்றனர். சில நேரங்களில் பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துநர்கள் சீட்டுக்காக சாலைகளிலேயே பேருந்துகளை நிறுத்தி தாக்கிக் கொள்ளும் சம்பவங்களும் அதிகரித்து வருகிறது.

இந்த நிலையில், இன்று காலை தீத்திபாளையத்திலிருந்து இ.எஸ்.ஐ. செல்லும் ஸ்ரீதேவி என்ற பெயர் கொண்ட S3 பேருந்தின் ஓட்டுநர், நடத்துநர்களும், போத்தனூரிலிருந்து வரதராஜபுரம் வரை செல்லும் கோகுலம் என்ற பெயர் கொண்ட 23A தனியார் பேருந்தின் ஓட்டுநர் மற்றும் நடத்துநர்களும் சாலையின் இருபுறமும் நடுவழியில் பேருந்தை நிறுத்தி சீட்டு பிரச்சினைக்காக தாக்கிக் கொண்டனர்.

இந்த சம்பவத்தை கண்ட உப்பிலிபாளையம் பகுதி பொதுமக்கள், தனியார் பேருந்து பணியாளர்களின் விதிமீறலை எதிர்த்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர், தகவலறிந்து வந்த சிங்காநல்லூர் போலீசார் பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துநர்களை காவல் நிலையம் அழைத்து சென்று அடிதடி வழக்குப்பதிவு செய்தனர்.



இந்த தனியார் பேருந்துகளின் தாக்குதல் சம்பவம் தொடர்பாக அப்பகுதியில் உள்ள சமூக ஆர்வலர் ஒருவர் கூறும்போது ;- இந்த தனியார் பேருந்துகள் ஒன்று வரதராஜபுரம் பேருந்து நிறுத்தம் வரை செல்லக்கூடியது, மற்றொன்று இ.எஸ்.ஐ. மருத்துவமனை பேருந்து நிறுத்தம் வரை செல்லக் கூடியது. ஆனால், இந்தப் பேருந்துகள் சீட்டு பிரச்சனைகளை காரணம் காட்டி உப்பிலிபாளையம் பேருந்து நிறுத்தத்திலேயே பேருந்துகளை திருப்பி விடுகின்றனர். இதனால், இந்த பேருந்துகளை நம்பி ஏறும் பயணிகள் பாதியிலேயே இறங்கி செல்லும் அவலம் ஏற்படுகிறது. பொதுமக்கள் எங்கள் பேருந்து நிறுத்தத்தில் பேருந்துகளை நிறுத்துங்கள் என அழுத்தம் கொடுத்தாலும், அவர்கள் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்படுகின்றனர். இப்படி இருக்க இன்று இந்த இரண்டு பேருந்துகளும் பாதியிலேயே பேருந்துகளை திருப்பி சீட்டுகள் ஏற்றிச் செல்லும் போது இருவருக்கும் இடையே பிரச்சனை மூண்டுள்ளது. இந்த பேருந்து ஓட்டுநர்களின் விதிமீறல் தொடர்பாக நாங்கள் கடந்த இரண்டு வாரத்திற்கு முன்பு கோவை மாவட்ட ஆட்சியரிடமும் புகார் அளித்துள்ளோம், என தெரிவித்தார்.

இ.எஸ்.ஐ.க்கு செல்ல வேண்டிய பேருந்துகளும், வரதராஜபுரத்திற்கு செல்லவேண்டிய பேருந்துகளும் சீட்டை காரணம் காட்டி உப்பிலிப்பாளையத்திலேயே பேருந்துகளை திருப்பி செல்வதால் பொதுமக்கள் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். இதில், தனியார் மற்றும் அரசு பேருந்து ஓட்டுநர்களை கண்காணிக்க வேண்டிய வட்டார போக்குவரத்து அலுவலர்கள் இவர்களின் அட்டகாசங்களை கண்டுகொள்வதில்லை. குறிப்பாக, தனியார் பேருந்துகளின் மீது எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை. இந்த தனியார் பேருந்துகளின் அட்டகாசம் தொடர்பாக பல்வேறு முறை ஊடகங்களில் செய்தி வெளியாகியும் வட்டார போக்குவரத்து அலுவலர்கள் மௌனம் காப்பது பொதுமக்கள் மத்தியில் பல்வேறு கேள்விகளை எழுப்புகிறது.

கோவை மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியராக கு.ராசமணி பொறுப்பேற்றதிலிருந்து சாதாரண பொதுமக்களின் புகார்கள் மீதும் கோரிக்கைகள் மீதும் உரிய நடவடிக்கைகள் எடுத்து வருகிறார். இந்த நிலையில், இந்த தனியார் பேருந்துகளின் அட்டகாசங்களை தடுக்க வேண்டிய வட்டாரப் போக்குவரத்து அலுவலர்கள் கண்டும் காணாமல் இருப்பதால் நம்பிக்கை இழந்த பொதுமக்கள் மாவட்ட ஆட்சியரே தலையிட்டு தீர்வு தர வேண்டும் என தங்களின் எதிர்பார்ப்பை கோரிக்கையாக வைக்கின்றனர்.

Newsletter

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...

கோவையில் தீவிர டெங்கு கொசு ஒழிப்பு: வீடு வீடாக ஆய்வு மற்றும் புகை மருந்து தெளிப்பு பணிகள்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி, குனியமுத்தூர் கோகுலம் நகர் மற்றும்...

FMSCI இந்திய தேசிய ராலி ஸ்பிரிண்ட் சாம்பியன்ஷிப் வென்ற SRIT மாணவர் கதிரொளி

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி இயந்திரவியல் துறை மூன்றாம் ஆண்டு மாணவர் எஸ். கதிரொளி, FMSCI இந்திய தேசிய ராலி ஸ்ப...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையில் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 38.44 அடியாகவும் உயர்ந்துள்ளது....

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஜூன் 26...

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...