மேட்டுப்பாளையம் மனுநீதி முகாமில் 204 பயனாளிகளுக்கு ரூ. 58.94 லட்சம் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகள் வழங்கல்

கோவை : மேட்டுப்பாளையம் அருகே மருதூர் கிராமத்தில் நடைபெற்ற மனுநீதி முகாமில் 204 பயனாளிகளுக்கு ரூ. 58.94 லட்சம் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

கோவை : மேட்டுப்பாளையம் அருகே மருதூர் கிராமத்தில் நடைபெற்ற மனுநீதி முகாமில் 204 பயனாளிகளுக்கு ரூ. 58.94 லட்சம் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.



​கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் வட்டம், மருதூர் கிராமம், ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் இன்று மனுநீதி நாள் முகாம் மாவட்ட ஆட்சியர் கு. ராசாமணி, தலைமையில் நடைபெற்றது. இம்முகாமில் 204 பயனாளிகளுக்கு ரூபாய் ரூ. 58.94 லட்சம் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இம்முகாமில் வருவாய் கோட்டாட்சியர் சுரேஷ், சமூக பாதுகாப்புத்திட்ட தனித்துணை ஆட்சியர் அமுதன், மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இரா. நல்லதம்பி, உதவி இயக்குநர் நிலஅளவைதவமணி, துணை இயக்குநர் தோட்டக்கலைத்துறை உமாராணி மேட்டுப்பாளையம் வட்டாட்சியர் சந்தாமணி உள்ளிட்ட பல்வேறு அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...

கோவையில் தீவிர டெங்கு கொசு ஒழிப்பு: வீடு வீடாக ஆய்வு மற்றும் புகை மருந்து தெளிப்பு பணிகள்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி, குனியமுத்தூர் கோகுலம் நகர் மற்றும்...

FMSCI இந்திய தேசிய ராலி ஸ்பிரிண்ட் சாம்பியன்ஷிப் வென்ற SRIT மாணவர் கதிரொளி

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி இயந்திரவியல் துறை மூன்றாம் ஆண்டு மாணவர் எஸ். கதிரொளி, FMSCI இந்திய தேசிய ராலி ஸ்ப...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையில் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 38.44 அடியாகவும் உயர்ந்துள்ளது....

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஜூன் 26...

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...