சின்னவேடம்பட்டி அருகே வீதியின் நடுவில் இருக்கும் கோவிலை அகற்றக் கோரி குடியிருப்புவாசிகள் மனு

கோவை : போக்குவரத்திற்கு இடையூறாக வீதியின் நடுவில் இருக்கும் கோவிலை அகற்றக் கோரி குடியிருப்புவாசிகள் கோவை மாநகராட்சியில் மனு அளித்தனர்.

கோவை : போக்குவரத்திற்கு இடையூறாக வீதியின் நடுவில் இருக்கும் கோவிலை அகற்றக் கோரி குடியிருப்புவாசிகள் கோவை மாநகராட்சியில் மனு அளித்தனர்.

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் இன்று மக்கள் குறை தீர்ப்பு முகாம் நடைபெற்றது. அதில், வார்டு எண்.42-க்குட்பட்ட சின்னவேடம்பட்டியில் உள்ள பிள்ளையார் கோவில் வீதியைச் சேர்ந்த பொதுமக்கள் மனு ஒன்றை அளித்துள்ளனர். அதில், பிள்ளையார் கோவில் வீதியில் அமைக்கப்பட்டுள்ள கோவிலின் கட்டமைப்பு 15 முதல் 20 அடி வரை சாலையை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ளதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.



இது குறித்து உள்ளூர்வாசி கவியரசு கூறுகையில், “சின்னவேடம்பட்டியின் மற்றொரு வீதியைச் சேர்ந்த ஒரு குழுவினர் சாலையை ஆக்கிரமித்து விளையாட்டு மாரியம்மன் கோவிலை அமைத்துள்ளனர். இதனால், 30 அடியாக இருந்த சாலையின் அகலம் 10 அடியாக குறைந்துள்ளது. இதனால், பிள்ளையார் கோவில் வீதியில் ஆம்புலன்ஸ் உள்ளிட்ட 4 சக்கர வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது,” என்கிறார்.

இந்த விவகாரம் தொடர்பாக கோவை மாவட்ட நிர்வாகத்திடம் மனு அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்காத நிலையில், கோவை மாநகராட்சி நிர்வாகத்திடம் குறைதீர்ப்பு முகாமில் மனு அளித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...

கோவையில் தீவிர டெங்கு கொசு ஒழிப்பு: வீடு வீடாக ஆய்வு மற்றும் புகை மருந்து தெளிப்பு பணிகள்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி, குனியமுத்தூர் கோகுலம் நகர் மற்றும்...

FMSCI இந்திய தேசிய ராலி ஸ்பிரிண்ட் சாம்பியன்ஷிப் வென்ற SRIT மாணவர் கதிரொளி

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி இயந்திரவியல் துறை மூன்றாம் ஆண்டு மாணவர் எஸ். கதிரொளி, FMSCI இந்திய தேசிய ராலி ஸ்ப...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையில் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 38.44 அடியாகவும் உயர்ந்துள்ளது....

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஜூன் 26...

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...