கோவையில் நண்பர்களுடன் வந்த இஸ்லாமிய பெண்ணை அவமதித்த வழக்கு : இருவர் கைது

கோவை : ஆத்துப்பாலம் அருகே நண்பர்களுடன் வாகனத்தில் வந்த இஸ்லாமிய பெண்ணை அவமதித்த சம்பவம் தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனர்.


கோவை : ஆத்துப்பாலம் அருகே நண்பர்களுடன் வாகனத்தில் வந்த இஸ்லாமிய பெண்ணை அவமதித்த சம்பவம் தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனர்.

கோவை மாநகரம்‌, டி-4 குனியமுத்தூர்‌ காவல்நிலைய பகுதியான அண்ணா காலனியில்‌ வசித்து வரும்‌ பெண்‌ ஒருவர்‌ பர்தா அணிந்து கொண்டு, கடந்த பிப்ரவரி மாதம் 02-ம்‌ தேதி இரு நபர்களுடன்‌ இருசக்கர வாகனத்தில்‌ வந்துள்ளார்‌. கோவை ஆத்துப்பாலம்‌ மரக்கடை அருகில்‌ இவர்கள்‌ வந்தபோது, இவர்களை மற்றொரு இருசக்கர வாகனத்தில்‌ வந்த சடிபுல்லா (44)‌, முகமது இப்ராஹீம்‌ (44) ஆகியோர்‌ வழிமறித்து "நீ முஸ்லீம்‌ பெண்தானே? அறிவில்லயா?" எனக்கேட்ரு தாக்க முற்பட்டுள்ளனர்‌. அப்போது, அப்பகுதிமில்‌ கூட்டம்‌ கூடியதால்‌ அவர்கள்‌ அப்பெண்ணை வீட்டுக்கு போகுமாறு கூறி, அவருடன்‌ வந்த இருவரையும் அழைத்துச் சென்றனர். பின்னர்,‌ அப்பெண்ணையும்‌ அவருடன்‌ வந்தவர்களையும்‌ எங்கும்‌ செல்லவிடாமல்‌ மறுத்து, அப்பெண்ணை நீ இவனை காதலிக்கிறாயா..? என கேட்டு துன்புறுத்தியும்‌, பெண்ணுடன்‌ வந்த இருவரையும்‌ கைகள்‌ மற்றும்‌ பெல்ட்டால்‌ அடித்தும்‌, கத்தியை காட்டி தகாத வார்த்தைகளால்‌ திட்டியும்‌, கொன்றுவிடுவதாகவும்‌ மிரட்டியுள்ளார்கள்‌. 

இது சம்பந்தமாக பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் பேரில்,டி-4 குனியமுத்தூர் காவல் நிலைய ஆய்வாளர் சக்திவேல் உத்தரவின்பேரில் குனியமுத்தூர் காவல் நிலையத்தில் பிரிவுகள் 341, 342, 2949), 323, 324, 506(1) மற்றும்‌ தமிழ்நாடு பெண்கள்‌ வன்கொடுமைத்‌ தருப்புச்சட்டம்‌ பிரிவு 4-ன்கீழ்‌ இன்று வழக்கு பதிவுசெய்யப்பட்டு, இவ்வழக்கில்‌ சம்மந்தப்பட்ட சமிபுல்லா மற்றும்‌ முகமது இப்ராஹீம்‌ ஆகியோர்‌ கைது செய்யப்பட்டு நீதிமன்றக்‌ காவலுக்கு அனுப்பப்பட்டனர்‌. இவ்வழக்கில்‌ சம்மந்தப்பட்ட மேலும்‌ இருவரை காவல்துறையினர்‌ தேடி வருகின்றனர்‌. சட்டத்தை கையில்‌ எடுத்துக்கொண்டு பிறரது தனிமனித உரிமையில்‌ தலையிடுவதும், அவர்களை துன்புறுத்துவதும்‌, தண்டிப்பதும்‌ தண்டனைக்குரிய குற்றமாகும்‌. இவ்வாறு சட்டத்திற்கு புறம்பான செயல்களில்‌ ஈடுபடுவோர் மீது சட்டப்படியான கடும்‌ நடவடிக்கை எடுக்கப்படும்‌ என கோவை மாநகர காவல்துறை சட்டம்‌ ஒழுங்கு துணை ஆணையர்‌ பாலாஜி சரவணன் தெரிவித்துள்ளார்‌.

Newsletter

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...

கோவையில் தீவிர டெங்கு கொசு ஒழிப்பு: வீடு வீடாக ஆய்வு மற்றும் புகை மருந்து தெளிப்பு பணிகள்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி, குனியமுத்தூர் கோகுலம் நகர் மற்றும்...

FMSCI இந்திய தேசிய ராலி ஸ்பிரிண்ட் சாம்பியன்ஷிப் வென்ற SRIT மாணவர் கதிரொளி

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி இயந்திரவியல் துறை மூன்றாம் ஆண்டு மாணவர் எஸ். கதிரொளி, FMSCI இந்திய தேசிய ராலி ஸ்ப...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையில் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 38.44 அடியாகவும் உயர்ந்துள்ளது....

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஜூன் 26...

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...