சாதி ஆணவப் படுகொலைகளை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் கோவையில் கண்டன ஆர்ப்பாட்டம்

கோவை : மேட்டுப்பாளையத்தில் காதலர்கள் ஆணவப் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் கோவையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

கோவை : மேட்டுப்பாளையத்தில் காதலர்கள் ஆணவப் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் கோவையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.



கடந்த 25-ம் தேதி மேட்டுப்பாளையம் பகுதியில் கார்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து கனகராஜ் - வர்ஷினி பிரியா என்ற காதல் ஜோடிகளை கனகராஜின் சகோதரர் வினோத் என்பவர் சரமாரியாக வெட்டியதில் கனகராஜ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். வர்ஷினி பிரியா கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 



இந்த ஆணவக் கொலையை கண்டித்த பல்வேறு சமூக அமைப்புகள், அவர்களுக்கு நீதி வேண்டும் என்றும், அரசு வழங்கக்கூடிய சலுகைகள், நிதியை உடனடியாக வழங்க வேண்டும் என்று பல்வேறு போராட்டங்களை நடத்தினர். 



இதன் ஒரு பகுதியாக, விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் சிவானந்த காலனி பவர் ஹவுஸ் முன்பு நடைபெற்றது. அக்கட்சியின் பொது செயலாளர் சிந்தனை செல்வன் தலைமையில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் 200-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். 



மேலும், சாதி ஆணவப் படுகொலைக்கு தனி சட்டம் இயற்றிட வேண்டும் என்றும், மேற்கு மாவட்டங்களை சாதிய வன்கொடுமை பகுதியாக அறிவிக்க வேண்டும் எனவும், ஆணவப் படுகொலையில் ஈடுபடுவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்கிட வேண்டும் என வலியுறுத்தி கண்டன முழக்கங்களை எழுபினர்.

Newsletter

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...

கோவையில் தீவிர டெங்கு கொசு ஒழிப்பு: வீடு வீடாக ஆய்வு மற்றும் புகை மருந்து தெளிப்பு பணிகள்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி, குனியமுத்தூர் கோகுலம் நகர் மற்றும்...

FMSCI இந்திய தேசிய ராலி ஸ்பிரிண்ட் சாம்பியன்ஷிப் வென்ற SRIT மாணவர் கதிரொளி

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி இயந்திரவியல் துறை மூன்றாம் ஆண்டு மாணவர் எஸ். கதிரொளி, FMSCI இந்திய தேசிய ராலி ஸ்ப...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையில் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 38.44 அடியாகவும் உயர்ந்துள்ளது....

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஜூன் 26...

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...