கோவை : கோவை வடக்கு தொகுதி எம்.எல்.ஏ. பி.ஆர்.ஜி. அருண்குமாரின் தந்தை இன்று காலமான நிலையில், அவரது ஆத்மா சாந்தியடைய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது :- கோவை மாவட்டம் வடக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பி.ஆர்.ஜி அருண்குமாரின் தந்தை கோவிந்தராஜூலு உடல்நலக் குறைவால் இன்று காலை காலமானார் என்ற செய்தியை அறிந்து நான் மிகுந்த வேதனை அடைந்தேன். கோவிந்தராஜூலு அருண்குமாருக்கு நல்லதொரு தந்தையாகவும், வழிகாட்டியாகவும், பக்கபலமாகவும் திகழ்ந்தவர். கோவிந்தராஜூலு அவர்களின் மறைவு, அவருடைய குடும்பத்தினருக்கு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு ஆகும். அன்னாரை இழந்து வாடும் அவருடைய மனைவி லலிதாம்பாள், மகன் அருண்குமார் மற்றும் அவருடைய குடும்பத்தார் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதுடன், அவரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன், எனக் கூறியுள்ளார்.