கோவை : ஆலாந்துறை அருகே சாலை விபத்தை ஏற்படுத்தியவரைக் கண்டித்து போராடிக் கொண்டிருந்தவர்கள் மீது வாகனத்தை ஏற்ற முற்பட்ட நபர் மீது பொதுமக்கள் தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

ஆலாந்துறை அருகே உள்ள கள்ளிப்பாளையம் பகுதியில் நேற்று இரவு ரங்கசாமி என்பவர் சாலை ஓரத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது, இரு சக்கர வாகனத்தில் மதுபோதையில் வந்த கோட்டைக்காடு பாபு என்பவர் ரங்கசாமி மீது மோதினார். இதில், படுகாயமடைந்த ரங்கசாமியை அருகில் இருந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்தநிலையில், விபத்தை ஏற்படுத்திய பாபுவை சிறைபிடித்த பொதுமக்கள் மருத்துவ உதவி செய்யும்படி வலியுறுத்தினர். இதையடுத்து, தகவலறிந்து வந்த போலீசார் பாபுவை பாதுகாப்புபடுத்தி பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால், பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாததால் அப்பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். பின்னர், வந்த பாபுவின் மகன் ஹரி பிரசாத் தனது தந்தையை அந்த பகுதியில் இருந்து அழைத்துச் செல்ல முற்பட்டார். இதை அறிந்த பாதிக்கப்பட்டோர் தரப்பினர் ஹரிபிரசாத் ஓட்டிவந்த காரை முற்றுகையிட்டனர். அப்போது, தன் தந்தையை வாகனத்தில் ஏற்றிய ஹரி பிரசாத் அந்தப் பகுதியில் இருந்து தப்பிக்கும் நோக்கத்தில் காரை முற்றுகையிட்டவர்களை பொருட்படுத்தாமல் வாகனத்தை வேகமாக இயக்கினார். இதில் சூழ்ந்திருந்த பொதுமக்கள் மீது காயம் ஏற்பட்டது. இதனால், ஆத்திரமடைந்த பொதுமக்கள் காரை சிறைபிடித்து தாக்குதல் நடத்தினர்.

அதேபோல, விபத்தை ஏற்படுத்தியவர் மீதும் அவரது மகன் மீதும் தாக்குதல் நடத்தினர். இதையடுத்து, தகவலறிந்து வந்த பாபுவின் தரப்பினர் பாதிக்கப்பட்டோர் தரப்பினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இது மோதலாக உருவாகும் சூழல் ஏற்பட்டது. இதையடுத்து, காவல்துறையினர் துரிதமாக செயல்பட்டு இரு தரப்பினரையும் அப்பகுதியில் இருந்த அப்புறப்படுத்தினர். இந்த சம்பவத்தால் ஆலாந்துறை அருகே பரபரப்பான சூழல் நிலவியது.