ஜாப் வேலைகளின் மீதான ஜி.எஸ்.டி. வரியை ரத்து செய்திடுக : மக்களவையில் கோவை எம்.பி., பி.ஆர். நடராஜன் வலியுறுத்தல்

டெல்லி : ஜாப் வேலைகளின் மீதான ஜி.எஸ்.டி. வரியை ரத்து செய்திட வேண்டும் என்று கோவை மக்களவை உறுப்பினர் பி.ஆர். நடராஜன் வலியுறுத்தியுள்ளார்.

டெல்லி : ஜாப் வேலைகளின் மீதான ஜி.எஸ்.டி. வரியை ரத்து செய்திட வேண்டும் என்று கோவை மக்களவை உறுப்பினர் பி.ஆர். நடராஜன் வலியுறுத்தியுள்ளார்.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. மக்களவையில் நேற்று முன் தினம் நாடாளுமன்ற நடத்தை விதிகள் 377ஆவது பிரிவின்கீழ் பி.ஆர். நடராஜன் உரையாற்றிய போது :- உலகில் அனைத்து பொருள்களும் மற்றும் சேவைகளும் பல நபர்களால் பல கட்டங்களாக, வேலை பிரிவினை வழியாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஒரு பொருளை உருவாக்குவதில் தனிநபர்கள், அமைப்புகள் மற்றும் நாடுகள், அதில் மிகவும் சிறப்பான முறையில் திறமைபெற்றவர்களைப் பயன்படுத்திக் கொண்டு, அவர்கள் அனைவரையும் கூட்டாக இணைத்தோ அல்லது வர்த்தகரீதியாக மற்றவர்களின் திறமைகளைப் பெற்றோ செய்து வருகின்றன. இதேபோன்றே நம் நாட்டில் புகழ்பெற்ற பல நிறுவனங்களின் உற்பத்திப் பொருள்களும் தனிநபர்களைப் பயன்படுத்தி ஜாப் வேலை (job work) மூலமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

நம் பொருள்கள் மற்றும் சேவைகள் வரிச் சட்டத்தின் கீழ் (GST Act-இன்கீழ்) ஜாப் வேலை என்பதன் பொருள், மற்றொரு நபருக்குச் சொந்தமான பொருள்களின் மீது தனிநபர் ஒருவரால் மேற்கொள்ளப்படும் வேலை என்பதாகும். இவ்வாறு ஜாப் வேலையைச் செய்யும் நபர், ஜாப் தொழிலாளி என்று அழைக்கப்படுகிறார். ஒரு பொருளை உற்பத்தி செய்வதில் ஒரு ஜாப் தொழிலாளியின் பணி ஒரு பகுதியாகவோ அல்லது முழுமையாகவோ அமைந்திடும். இவ்வாறு, பல சிறிய மற்றும் நடுத்தரத் தொழில்முனைவோர்கள் இத்தகைய ஜாப் வேலைகளைச் சார்ந்தே முழுமையாக இருந்து வருகிறார்கள். அவர்கள் ஜாப் வேலைகளை எடுத்துக்கொள்ளும்போது, அப்பொருள்களின் பிரதான உற்பத்தியாளர்கள் அவற்றுக்குத் தேவையான அனைத்து மூலப் பொருள்களையும் மற்றும் உபகரணங்களையும் ஜாப் தொழிலாளர்களிடம் அளித்துவிடுவார்கள். அவர்கள் அவற்றைப் பெற்றுக்கொண்டு அப்பொருள்களைச் செய்து தந்துவிடுவார்கள். இவ்வாறு ஒரு ஜாப் தொழிலாளியைப் பொருத்தவரை, அவர்கள் எதையும் வாங்கிக் கொண்டுமில்லை, அதேபோன்று அவர்கள் எதையும் விற்றுக்கொண்டுமில்லை. அதேபோன்று புதிதாக அவர்கள் ஒன்றும் தயாரித்திடுவதுமில்லை. இவ்வாறு ஒரு ஜாப் தொழிலாளியால் ஒரு பொருளின் பாதி முடிந்த பொருளையோ அல்லது முற்றிலுமாக முடித்து வைக்கப்பட்ட பொருளையோ அப்பொருளின் பிரதான உற்பத்தியாளர் அந்த ஜாப் தொழிலாளியிடமிருந்து பெற்றுக்கொண்டு, பின்னர் அவர் அதனை தன்னுடைய நுகர்வோருக்கு விற்பனை செய்கிறார். இவ்வாறு அவர் தன் நுகர்வோருக்கு விற்பனை செய்யும்போது மீண்டும் ஒருமுறை அவரிடமிருந்து ஜி.எஸ்.டி. வரி வசூல் செய்யப்படுகிறது. ஜாப் வேலைகளில் ஒரு பொருள் உற்பத்தி செய்யப்படுகையில் பல கட்டங்களை அது தாண்டுகிறது. இவ்வாறு அது மேற்கொண்டிடும் ஒவ்வொரு கட்டத்திலும் தற்சமயம் ஜிஎஸ்டி வரி அதன்மீது சுமத்தப்படுகிறது. அதாவது ஒரே பொருளுக்கு பல தடவைகள் ஜி.எஸ்.டி. வரி செலுத்த வேண்டியிருக்கிறது.

இறுதியாக இவ்வாறு சுமத்தப்படும் அத்தனை ஜி.எஸ்.டி. வரிகளும் கடைசியாக அதனை வாங்கிடும் சாமானியனின் மீது, அதாவது பொருளை மற்றும் சேவைகளை வாங்கும் நபர் மீது சுமத்தப்படுகிறது. இவ்வாறு சிறிய மற்றும் நடுத்தர உற்பத்தியாளர்கள் உற்பத்தி செய்திடும் பொருள்களுக்கு பல கட்டங்களில் ஜி.எஸ்.டி. வரி சுமத்தப்படுவதால், இவர்களின் வர்த்தகமே பெரும் பாதிப்புக்கு உள்ளாகி பலர் தங்கள் வர்த்தக நிறுவனங்களை மூடும் நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார்கள். இவ்வாறு நான் மேலே சொன்ன காரணங்களைக் கணக்கில் எடுத்துக்கொண்டு, மத்திய அரசாங்கம் ஜாப் வேலைகளின் மீது ஜி.எஸ்.டி வரி விதிப்பதை ரத்து செய்திட உரிய நடவடிக்கைகளை உடனடியாக எடுத்திட வேண்டியது அவசியம் என்று வலியுறுத்துகிறேன். அப்போதுதான் சிறிய மற்றும் நடுத்தர தொழில்முனைவோர்கள் ஏதாவது வேலைகளைப் பெற்று, எவ்விதச் சிரமமுமின்றி தங்கள் ஜீவனத்தை நடத்திட முடியும், என பி.ஆர். நடராஜன் பேசினார்.

Newsletter

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...

கோவையில் தீவிர டெங்கு கொசு ஒழிப்பு: வீடு வீடாக ஆய்வு மற்றும் புகை மருந்து தெளிப்பு பணிகள்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி, குனியமுத்தூர் கோகுலம் நகர் மற்றும்...

FMSCI இந்திய தேசிய ராலி ஸ்பிரிண்ட் சாம்பியன்ஷிப் வென்ற SRIT மாணவர் கதிரொளி

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி இயந்திரவியல் துறை மூன்றாம் ஆண்டு மாணவர் எஸ். கதிரொளி, FMSCI இந்திய தேசிய ராலி ஸ்ப...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையில் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 38.44 அடியாகவும் உயர்ந்துள்ளது....

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஜூன் 26...

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...