சிறுவாணி பகுதியில் தொடர் மழை எதிரொலி : வறண்ட அத்திக்கடவு பவானி ஆற்றில் 2 மாதங்களுக்கு பின் மீண்டும் நீர்வரத்து

கோவை : சிறுவாணி பகுதியில் பெய்து வரும் பருவமழையால் இரண்டு மாதங்களுக்கு பிறகு வறண்டு கிடந்த அத்திக்கடவு பவானி ஆற்றில் மீண்டும் நீர்வரத்து தொடங்கியதால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

கோவை : சிறுவாணி பகுதியில் பெய்து வரும் பருவமழையால் இரண்டு மாதங்களுக்கு பிறகு வறண்டு கிடந்த அத்திக்கடவு பவானி ஆற்றில் மீண்டும் நீர்வரத்து தொடங்கியதால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் மேற்குதொடர்ச்சி மலைப்பகுதியின் நடுவே பில்லூர் அணை உள்ளது. நீலகிரி மாவட்டத்தில் அப்பர் பவானி, குந்தா சைலண்டு வேலி மற்றும் வெள்ளியங்கிரி மலைத்தொடரான சிறுவாணி மலையில் பெய்யும் மழை நீரை ஆதாரமாக கொண்டு கட்டப்பட்டுள்ள இந்த அணையானது தென்மேற்கு பருவமழை காலத்தில் ஜூன், ஜூலை மாதங்களில் இரண்டு முறை நிரம்பி வழியும். ஆனால், இந்தாண்டு தென்மேற்கு பருவமழை எதிர்பார்த்தபடி பொழியாததால் அத்திக்கடவு பவானி ஆற்றில் தண்ணீர் வரத்து முற்றிலுமாக குறைந்து, அங்கு வசிக்கும் மலைவாழ் மக்களின் குடிநீருக்கு தட்டுப்பாடு ஏற்பட்டது. 



இந்த நிலையில், சிறுவாணி நதியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும், நீலகிரி மாவட்டத்தில் சில பகுதிகளிலும் தென்மேற்கு பருவ மழையானது தற்போது பெய்து வருவதால், பில்லூர் அணைக்கு நீர் வரத்தானது இரண்டு மாதங்களுக்கு பின் மீண்டும் அதிகரித்துள்ளது. 100 அடி கொள்ளளவு கொண்ட அணையின் நீர்மட்டம் தற்போது 89 அடியாக உள்ளது. அணைக்கு நீர் வரத்தானது 1,500 கன அடியாக உள்ளது. தொடர்ந்து, அணையின் நீர் பிடிப்பு பகுதிகளில் சாரல் மழை பெய்து வருவதால், அணைக்கான நீர்வரத்து மேலும் உயர வாய்ப்பு உள்ளது. இதனால், விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும், பவானி ஆற்று நீரினை ஆதாரமாகக் கொண்டு செயல்படுத்தப்பட்ட குடிநீர் திட்டங்களுக்கு தண்ணீர் தடையின்றி கிடைக்கும் என்பதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.



வழக்கமாக ஜூன், ஜூலை மாதங்களில் தண்ணீர் வரத்து பவானி ஆற்றில் அதிகரித்து அணை நிரம்பும் என்ற போதும், எதிர்பார்த்த அளவுக்கு பருவமழை பெய்யாததால் அணை இதுவரை நிரம்பவில்லை என்பதும் குறிபிடதக்கது.

Newsletter

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...

கோவையில் தீவிர டெங்கு கொசு ஒழிப்பு: வீடு வீடாக ஆய்வு மற்றும் புகை மருந்து தெளிப்பு பணிகள்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி, குனியமுத்தூர் கோகுலம் நகர் மற்றும்...

FMSCI இந்திய தேசிய ராலி ஸ்பிரிண்ட் சாம்பியன்ஷிப் வென்ற SRIT மாணவர் கதிரொளி

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி இயந்திரவியல் துறை மூன்றாம் ஆண்டு மாணவர் எஸ். கதிரொளி, FMSCI இந்திய தேசிய ராலி ஸ்ப...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையில் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 38.44 அடியாகவும் உயர்ந்துள்ளது....

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஜூன் 26...

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...