பொறியியல் படிப்பிற்கு இன்னும் 2 ஆண்டுகளுக்கு நுழைவுத் தேர்வு கிடையாது : அகில இந்திய தொழில்நுட்ப கல்வி ஆணையம்

கோவை : பொறியியல் படிப்பிற்கு இன்னும் இரண்டு ஆண்டுகளுக்கு நுழைவுத் தேர்வு இல்லை என கோவையில் அகில இந்திய தொழில்நுட்ப கல்வி ஆணைய தலைவர் அனில் சஹாஸ்தரபுத்தே தெரிவித்துள்ளார்.

கோவை : பொறியியல் படிப்பிற்கு இன்னும் இரண்டு ஆண்டுகளுக்கு நுழைவுத் தேர்வு இல்லை என கோவையில் அகில இந்திய தொழில்நுட்ப கல்வி ஆணைய தலைவர் அனில் சஹாஸ்தரபுத்தே தெரிவித்துள்ளார்.



மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டுத்துறை சார்பாக இந்தியா முழுவதும் 18 இடங்களில் தொழில்துறையில் தீர்வுகளுக்கான வன்பொருள் கண்டுபிடிப்புகள் எனப்படும் ஸ்மார்ட் இந்தியா ஹேக்கத்தான் போட்டி நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக, கோவை சரவணம்பட்டியில் உள்ள தனியார் நிறுவனத்தில் இந்த போட்டி நடைபெற்று வருகிறது. இதனை அகில இந்திய தொழில்நுட்ப கல்வி ஆணைய தலைவர் அனில் சஹாஸ்தரபுத்தே நேற்று பார்வையிட்டார். 

பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்ததாவது :- மாணவர்களின் வன்பொருகள் கண்டுபிடிப்புகள் தொழில்துறையில் உள்ள குறைபாடுகளை தீர்க்கும் வகையில் அமைந்துள்ளது. நாட்டிற்கு பயனுள்ள கண்டுபிடிப்புகளை இதுபோன்ற போட்டிகளின் மூலம் மாணவர்கள் கொடுத்து வருகின்றனர். மாணவர்களின் கண்டுபிடிப்புகளுக்கு அரசு சார்பாக நிதி உதவி வழங்கப்படுவத்தோடு, அதனை சந்தைப்படுத்துவதற்கான வாய்ப்புகளும் உருவாக்கி கொடுக்கப்படுகிறது. பொறியியல் படிப்பிற்கு இன்னும் இரண்டு ஆண்டுகளுக்கு நுழைவுத் தேர்வு இல்லை. தரம் இல்லாத பொறியியல் கல்லூரிகள் கண்காணிக்கப்பட்டு வருகிறது. பெரும்பாலான பொறியியல் கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கை இல்லாத காரணத்தால், நிர்வாகமே கல்லூரியை மூடிவிட்டது. பொறியியல் கல்லூரிகளில் கல்லி கட்டணத்தை முறைப்படுத்த ஒவ்வொரு மாநிலத்திலும் கல்விக் கட்டணம் ஒழுங்கு முறை குழு செயல்பட்டு வருகிறது, என தெரிவித்தார்.

Newsletter

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...

கோவையில் தீவிர டெங்கு கொசு ஒழிப்பு: வீடு வீடாக ஆய்வு மற்றும் புகை மருந்து தெளிப்பு பணிகள்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி, குனியமுத்தூர் கோகுலம் நகர் மற்றும்...

FMSCI இந்திய தேசிய ராலி ஸ்பிரிண்ட் சாம்பியன்ஷிப் வென்ற SRIT மாணவர் கதிரொளி

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி இயந்திரவியல் துறை மூன்றாம் ஆண்டு மாணவர் எஸ். கதிரொளி, FMSCI இந்திய தேசிய ராலி ஸ்ப...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையில் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 38.44 அடியாகவும் உயர்ந்துள்ளது....

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஜூன் 26...

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...