கோவையில் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்கள் பற்றிய கணக்கெடுக்கும் பணி விரைவில் தொடக்கம்

கோவை : கோவை மாநகராட்சி சார்பில் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்கள் பற்றிய கணக்கெடுக்கும் பணி விரைவில் தொடங்க உள்ளது.

கோவை : கோவை மாநகராட்சி சார்பில் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்கள் பற்றிய கணக்கெடுக்கும் பணி விரைவில் தொடங்க உள்ளது.

மக்களவை மற்றும் இடைத் தேர்தலுக்கு முன்னதாக, வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்களின் விபரங்களை சரிபார்க்க மாநகராட்சிகளுக்கு தமிழக அரசு உத்தரவிட்டது. இதையடுத்து, கள ஆய்வு மேற்கொள்ள 600 பேர் நியமனம் செய்யப்பட்டு, 15 நாட்களில் பணிகளை விரைந்து முடிக்க உத்தரவிடப்பட்டுள்ளதாக கோவை மாநகராட்சியின் மூத்த அதிகாரி தெரிவித்துள்ளார். சம்பந்தப்பட்டவர்களின் குடும்ப உழ்ருப்பினர்களின் விபரம், வங்கி கணக்கு விபரம், ஆதார் எண், சொந்த வீடா அல்லது வாடகை வீடா..? மற்றும் ஏதேனும் சொத்துக்கள் இருக்கின்றனவா..?உள்ளிட்ட பல்வேறு விவரங்களை சேகரிக்க உள்ளனர். இதில், ஏதேனும் வேறுபாடுகள் இருப்பின் அவற்றை மாற்றம் செய்யப்படும்.



வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளதாக சுமார் 1.50 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். கடந்த 2008-ம் ஆண்டு எடுக்கப்பட்ட கணக்கெடுப்பில் 65,000 பேர் வறுமை கோட்டிற்கு கீழ் இருப்பது உறுதி செய்யப்பட்டது. உள்ளாட்சி அமைப்புகளின் பரிந்துரையின் பேரில் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்களின் பட்டியலில் இடம் பெறும் குடும்பங்களுக்கு, முதலமைச்சர் அறிவித்தபடி, ரூ. 2,000 பிப்ரவரி முதல் விநியோகிக்கப்பட் உள்ளது.

Newsletter

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...

கோவையில் தீவிர டெங்கு கொசு ஒழிப்பு: வீடு வீடாக ஆய்வு மற்றும் புகை மருந்து தெளிப்பு பணிகள்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி, குனியமுத்தூர் கோகுலம் நகர் மற்றும்...

FMSCI இந்திய தேசிய ராலி ஸ்பிரிண்ட் சாம்பியன்ஷிப் வென்ற SRIT மாணவர் கதிரொளி

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி இயந்திரவியல் துறை மூன்றாம் ஆண்டு மாணவர் எஸ். கதிரொளி, FMSCI இந்திய தேசிய ராலி ஸ்ப...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையில் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 38.44 அடியாகவும் உயர்ந்துள்ளது....

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஜூன் 26...

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...