சரவணம்பட்டி காவல்நிலையத்தில் கையெழுத்து போட வந்த இளைஞர்கள் மாயம் : பெற்றோர்கள் காவல் நிலையத்தை முற்றுகை

கோவை : சரவணம்பட்டி அருகே காவல் நிலையத்தில் கையெழுத்து போட வந்த இரண்டு இளைஞர்கள் மாயமானதையடுத்து, பெற்றோர்கள் காவல் நிலையத்தை முற்றுகையிட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை : சரவணம்பட்டி அருகே காவல் நிலையத்தில் கையெழுத்து போட வந்த இரண்டு இளைஞர்கள் மாயமானதையடுத்து, பெற்றோர்கள் காவல் நிலையத்தை முற்றுகையிட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

சரவணம்பட்டி காவல் நிலையத்திற்கு உட்பட்ட கணபதி பகுதியில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஏற்பட்ட கோஷ்டி மோதலில் ராஜேஷ், பிரசாந்த் என்ற இரண்டு இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர். மேலும், இவர்கள் மீது காவல் ஆணையாளர் உத்தரவின் பேரில், குண்டர் சட்டம் பாய்ந்தது. அதைத் தொடர்ந்து, அவர்கள் இருவரும் சிறையிலிருந்து பிணையில் வந்து தினந்தோறும் சரவணம்பட்டி காவல்நிலையத்தில் கையெழுத்திட்டு வந்தனர்.



இந்த நிலையில், இன்று வழக்கம்போல சரவணம்பட்டி காவல்நிலையத்திற்கு கையெழுத்து போட வந்தவர்கள் மீண்டும் வீடு திரும்பவில்லை. இதையடுத்து, பல்வேறு பகுதிகளில் தேடிய பெற்றோர் மற்றும் உறவினர்கள் இளைஞர்கள் வீடு திரும்பாததையடுத்து, காவல் நிலையம் சென்றனர். மேலும், அருகே உள்ள நண்பர்களிடமும் இளைஞர்களின் உறவினர்கள் விசாரணை செய்ததில் காவல் நிலையம் மீது சந்தேகம் எழுந்துள்ளது. இதையடுத்து, ஆத்திரமடைந்த உறவினர்கள் மற்றும் பெற்றோர்கள் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

கோவை சரவணம்பட்டி காவல் நிலையத்தை பெற்றோர்களும், உறவினர்களும் முற்றுகையிட்டு போராட்டம் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Newsletter

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...

கோவையில் தீவிர டெங்கு கொசு ஒழிப்பு: வீடு வீடாக ஆய்வு மற்றும் புகை மருந்து தெளிப்பு பணிகள்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி, குனியமுத்தூர் கோகுலம் நகர் மற்றும்...

FMSCI இந்திய தேசிய ராலி ஸ்பிரிண்ட் சாம்பியன்ஷிப் வென்ற SRIT மாணவர் கதிரொளி

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி இயந்திரவியல் துறை மூன்றாம் ஆண்டு மாணவர் எஸ். கதிரொளி, FMSCI இந்திய தேசிய ராலி ஸ்ப...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையில் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 38.44 அடியாகவும் உயர்ந்துள்ளது....

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஜூன் 26...

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...