கூடலூரில் அனுமதி இன்றி இயங்கிய 11 சொகுசு விடுதிகளுக்கு சீல்

நீலகிரி : கூடலூரை அடுத்த நடுவட்டம் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில் வீடு கட்ட அனுமதி பெற்று முறைகேடாக வணிக ரீதியில் இயங்கி வந்த சொகுசு விடுதிகளுக்கு அதிகாரிகள் இன்று சீல் வைத்தனர்.

நீலகிரி : கூடலூரை அடுத்த நடுவட்டம் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில் வீடு கட்ட அனுமதி பெற்று முறைகேடாக வணிக ரீதியில் இயங்கி வந்த சொகுசு விடுதிகளுக்கு அதிகாரிகள் இன்று சீல் வைத்தனர்.

மலைப் பிரதேசங்களில் உரிய அனுமதி பெறாமல் கட்டப்படும் வணிக ரீதியிலான கட்டிடங்கள், தங்கும் சொகுசு விடுதிகள் உள்ளிட்டவை மீது நீதிமன்ற உத்தரவின்படி சட்டரீதியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஏற்கனவே, நீலகிரி மாவட்டத்தில் மசினகுடி பகுதியில் பல தங்கும் சொகுசு விடுதிகள் சீல் வைக்கப்பட்டன.

இந்த நிலையில், நடுவம் பேருராட்சிக்குட்பட்ட வுட்புரூக் பகுதியில் 11 நபர்கள் பெயரில் வீடு கட்ட அனுமதி பெற்று கட்டப்பட்ட கட்டிடங்களில் ஒரே நிர்வாகத்தின் மூலம் சொகுசு விடுதிகள் இயங்கி வந்துள்ளது. இது குறித்து மாவட்ட ஆட்சியருக்கு கிடைத்த புகாரின் பேரில், நடுவட்டம் பேரூராட்சி செயல் அலுவலர் இப்ராகிம் தலைமையில் அதிகாரிகள் காவல்துறை உதவியுடன் நடத்திய ஆய்வில் தகவல் உறுதிப்படுத்தப்பட்டு, கடந்த வாரம் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து, இன்று மாலை ஐந்து மணிக்கு 11 விடுதிகளுக்கும் அதிகாரிகள் சீல் வைத்தனர். இதனை தொடர்ந்து, இங்குள்ள கட்டிடங்களுக்கான மின் இணைப்பு, குடிநீர் இணைப்பு ஆகியவற்றையும் அதிகாரிகள் துண்டித்தனர். 

Newsletter

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...

கோவையில் தீவிர டெங்கு கொசு ஒழிப்பு: வீடு வீடாக ஆய்வு மற்றும் புகை மருந்து தெளிப்பு பணிகள்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி, குனியமுத்தூர் கோகுலம் நகர் மற்றும்...

FMSCI இந்திய தேசிய ராலி ஸ்பிரிண்ட் சாம்பியன்ஷிப் வென்ற SRIT மாணவர் கதிரொளி

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி இயந்திரவியல் துறை மூன்றாம் ஆண்டு மாணவர் எஸ். கதிரொளி, FMSCI இந்திய தேசிய ராலி ஸ்ப...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையில் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 38.44 அடியாகவும் உயர்ந்துள்ளது....

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஜூன் 26...

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...