கோவை : மோட்டார் வாகன சட்டதிருத்தத்தை கைவிட வலியுறுத்தி கோவையில் சாலை போக்குவரத்து தொழிலாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

லாரி, கூட்ஸ், ஆட்டோ, ஆம்னி, டெம்போ, டேக்சி வாகன ஓட்டுநர்களும், வாகன பழுதுபார்ப்போர் என 10 கோடிக்கும் மேற்பட்டோர் சாலை போக்குவரத்தை நம்பி உள்ளனர். பன்னாட்டு நிறுவனங்களுக்கு ஆதரவாக மத்திய அரசு மோட்டர் வாகன சட்டத்திருத்தத்தைக் கொண்டு வர முயற்சிப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த நிலையில், வாழ்வாதாரத்தை பறிக்கும் இந்த சட்டதிருத்தத்தை கைவிட வலியுறுத்தி சி.ஐ.டி.யூ. சாலை போக்குவரத்து தொழிலாளர் சங்கத்தின் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சிவானந்தகாலனி பவர்ஹவுஸ் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் மாவட்ட தலைவர் பி.வேணுகோபால் தலைமை தாங்கினார்.
மோட்டார் வாகன சட்டத்திருத்தத்தினால் ஏற்படும் அபாயங்கள் குறித்து சாலை போக்குவரத்து தொழிலாளர் சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் எஸ்.மூர்த்தி சிறப்புரையாற்றினார். முன்னதாக, பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருட்களின் விலைகளை ஜி.எஸ்.டி. வரம்பிற்குள் கொண்டு வரவேண்டும், இன்சூரன்ஸ் கட்டண உயர்வைக் கைவிட வேண்டும், டோல்கேட் கட்டணங்களை குறைத்து நெறிப்படுத்துதல், காலாவதியான டோல்கேட்டை அகற்றிட வேண்டும், ஆர்.டி.ஓ. மற்றும் காவல்துறையினரின் முறைகேடுகள், அத்துமீறல்களை தடுத்திட வேண்டும் உள்ளிட்ட முழக்கங்களை எழுப்பினர்.