கோவை : மாணவர்களின் புதிய சிந்தனைகளை வெளிக் கொண்டு வரும் விதமாக ஃபோர்ஜ் சார்பில் ஸ்மார்ட் இந்தியா ஹேக்கத்தான் (ஹார்டுவேர் எடிசன்) போட்டி கோவையில் இன்று தொடங்கியது.
கோவை : மாணவர்களின் புதிய சிந்தனைகளை வெளிக் கொண்டு வரும் விதமாக ஃபோர்ஜ் சார்பில் ஸ்மார்ட் இந்தியா ஹேக்கத்தான் (ஹார்டுவேர் எடிசன்) போட்டி கோவையில் இன்று தொடங்கியது.

சமுதாயம் மற்றும் தொழில்துறையில் உள்ள முக்கிய பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் விதமாகவும், புதுமைகளை ஒருங்கிணைத்து, மாணவர்களிடம் உள்ள திறமைகளை வெளிக் கொண்டு வரும் வகையில் ஃபோர்ஜ் நிறுவனத்தின் சார்பில் ஸ்மார்ட் இந்தியா ஹேக்கத்தான் என்ற மாபெரும் போட்டிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. கடந்த 2017-ம் ஆண்டு நடந்த ஹேக்கத்தான் போட்டியில் 50,000 மாணவர்கள் கலந்து கொண்டனர். இந்த முறை தொழில்துறையினர், கார்ப்பரேட் நிறுவனத்தினர் என 2,00,000 பேர் கலந்து கொள்ள உள்ளனர்.

விவசாயம், கிராமப்புற மேம்பாடு, உணவு தொழில்நுட்பம், கழிவு மேலாண்மை, தூய்மையான நீர், புதுப்பிக்கத்தக்க ஆற்றல், சுகாதாரம், ஸ்மார்ட் வாகனங்கள், ஸ்மார் கம்யூனிகேஷன், விளையாட்டு, ஃபிட்னஸ், நிலையான சுற்றுச்சூழல், ஸ்மார்ட் டெக்ஸ்டைல்ஸ், ஸ்மார்ட் சிட்டிஸ் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் நிலவும் 198 பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் வகையில் மாணவர்கள் குழுவாக செயல்பட உள்ளனர். நாடு முழுவதும் உள்ள 12 அணிகள் இன்று முதல் 12-ம் தேதி வரை தொடர்ந்து 5 நாட்கள் ஸ்மார்ட் இந்தியா ஹேக்கத்தான் போட்டியில் கலந்து கொண்டு பிரச்சனைகளுக்கு தீர்வு காண உள்ளனர்.

இது தொடர்பாக ஏ.ஐ.சி.டி.இ.யின் தலைவர் அனில் சஹாஸ்ரபுதே பேசியதாவது :- இது தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக நடத்தப்படும் ஸ்மார்ட் இந்தியா ஹேக்கத்தான் போட்டியாகும். ஒவ்வொரு ஆண்டு போட்டியாளர்களின் எண்ணிக்கையும், பிரச்சனைகளுக்கான தீர்வு காண்பதும் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. முதல்முறையாக 2017-ம் ஆண்டு தொடங்கப்பட்ட ஸ்மார்ட் இந்தியா ஹேக்கத்தான் போட்டியில் 50,000 பேர் கலந்து கொண்டனர். 2018-ல் சுமார் ஒரு லட்சம் பேர் பங்கேற்றனர். இந்த ஆண்டு சுமார் 2,00,000 மாணவர்கள் பங்கேற்க இருக்கின்றனர். ஸ்மார்ட் இந்திய ஹேக்கத்தான் போட்டியானது புதுமைக்கான மிகப்பெரிய திறந்தவெளி நிகழ்ச்சியாகும்.

இன்று முதல் 5 நாட்கள் நடக்கும் இந்தப் போட்டியில் வெற்றி பெறும் முதல் 3 அணிகளுக்கு முறையே ரூ. 1,00,000, ரூ. 75,000 மற்றும் ரூ. 50,000 ரொக்கம் வழங்கப்படுகிறது. அதுமட்டுமல்லாமல், அவர்களின் தயாரிப்புகளை முன்னணி நிறுவனத்தின் மூலம் தயாரித்து விற்பனை செய்யும் வாய்ப்பை பெற முடியும்.
