கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க கர்நாடக அரசு முடிவு

கோவை : கர்நாடக அணைகளில் இருந்து காவிரி நீரை தமிழகத்திற்கு திறந்துவிட கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கோவை : கர்நாடக அணைகளில் இருந்து காவிரி நீரை தமிழகத்திற்கு திறந்துவிட கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் மழை பெய்து வருவதால் கர்நாடகாவில் உள்ள அணைகளின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. இந்த நிலையில், தமிழகத்தில் அன்றாட பயன்பாட்டிற்கே தண்ணீர் பற்றாக்குறை பிரச்சினை நிலவி வருகிறது. முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு நிலத்தடி நீர் மட்டம் குறைந்திருப்பதால், மக்கள் மழை எதிர்பார்த்துள்ளனர். இதனிடையே, காவிரியில் இருந்து கர்நாடகம் தண்ணீரை திறந்து விட்டால் பற்றாக்குறை பிரச்சினை ஓரளவுக்கு கட்டுக்குள் வர வாய்ப்புள்ளதாகக் கருதப்பட்டது.

இந்த நிலையில், காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை காணப்படுவதால் தண்ணீரை திறக்கும் முடிவுக்கு கர்நாடகம் வந்துள்ளது. இதற்கு முதலமைச்சர் குமாரசாமியும் ஒப்புதல் அளித்துள்ளார். 

காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவுப்படி கர்நாடகம் தமிழகத்திற்கு ஜூனில் மட்டும் 9.19 டி.எம்.சி. தண்ணீரை வழங்க வேண்டும். இதை உடனடியாக வழங்கக் கோரி கடந்த மாதம் தமிழக அரசு சார்பில் வலியுறுத்தப்பட்டது. அதையடுத்து, தமிழகத்திற்கு தண்ணீரை வழங்க காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...

கோவையில் தீவிர டெங்கு கொசு ஒழிப்பு: வீடு வீடாக ஆய்வு மற்றும் புகை மருந்து தெளிப்பு பணிகள்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி, குனியமுத்தூர் கோகுலம் நகர் மற்றும்...

FMSCI இந்திய தேசிய ராலி ஸ்பிரிண்ட் சாம்பியன்ஷிப் வென்ற SRIT மாணவர் கதிரொளி

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி இயந்திரவியல் துறை மூன்றாம் ஆண்டு மாணவர் எஸ். கதிரொளி, FMSCI இந்திய தேசிய ராலி ஸ்ப...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையில் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 38.44 அடியாகவும் உயர்ந்துள்ளது....

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஜூன் 26...

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...