நேர்மறை அணுகுமுறை மூலம் வாழ்வாதாரத்தை மேம்படுத்த வேண்டும் : திருநங்கைகளுக்குக் கோவை சட்டம் ஒழுங்கு துணை ஆணையர் அறிவுரை

கோவை : நேர்மறை அணுகுமுறை மூலம் திருநங்கைகள் தங்களது வாழ்வாதாரத்தை மேம்படுத்த முயற்சி செய்ய வேண்டும் என கோவை சட்டம் ஒழுங்கு துணை ஆணையர் பாலாஜி சரவணன் அறிவுரை வழங்கினார்.

கோவை : நேர்மறை அணுகுமுறை மூலம் திருநங்கைகள் தங்களது வாழ்வாதாரத்தை மேம்படுத்த முயற்சி செய்ய வேண்டும் என கோவை சட்டம் ஒழுங்கு துணை ஆணையர் பாலாஜி சரவணன் அறிவுரை வழங்கினார்.



கோவை பராக்சியர் மற்றும் ரோட்டரி ஐகான் சங்கம், திருநங்கைகள் நல சங்கம் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி அவிநாசி சாலையில் உள்ள இந்திய தொழில் வர்த்தக சபை அரங்கில் நடைபெற்றது. இதில், கோவை மாநகர சட்டம் ஒழுங்கு துணை ஆணையர் பாலாஜி சரவணன் கலந்து கொண்டு பேசினார். 



அவர் பேசியதாவது :- நேர்மறை அணுகுமுறை மூலம் திருநங்கைகள் வாழ்வாதாரத்தை மேம்படுத்த முயல வேண்டும். கோவையில் சமீபத்தில் திருநங்கைகள் சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டனர். யாரோ சிலர் செய்யும் தவறுகளால் ஒட்டுமொத்த சமுதாயம் பாதிக்கப்படுகிறது. தற்போதைய காலகட்டத்தில் அரசு மற்றும் பல்வேறு துறைகளில் திருநங்கைகள் சிறப்பாக செயல்படுகின்றனர். கிடைக்கப்பெறும் வாய்ப்புகளை பயன்படுத்தி முன்னேற்றம் காண வேண்டும். தவறான அணுகுமுறைகளை தவிர்த்து வாழ்வை மேம்படுத்த முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும், எனக் கூறினார். 

இதனிடையே, இமையம் அமைப்பின் திட்ட மேலாளர் சித்ரா, 30 திருநங்கைகளை ஊர்க்காவல் படையில் சேர்க்க வேண்டுகோள் வைக்கப்பட்டு, அதற்கான விண்ணப்பங்களும் பெறப்பட்டன. ஆனால், இதுவரை அந்தப் பணிகள் நடைமுறைப்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்படவில்லை, என தெரிவித்தார். அப்போது, திருநங்கை பத்மினி பி.எச்.டி. பயில உதவிட வேண்டும், எனக் கோரிக்கை விடுத்தார்.



இதற்கு பதில் அளித்த துணை ஆணையர் பாலாஜி சரவணன், திருநங்கைகள் வாழ்வாதாரம் மேம்படுத்த விரைவில் ஒரு கூட்டம் நடத்தப்பட்டு, தேவையான அனைத்து உதவிகளும் கிடைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என தெரிவித்தார்.



இதன் பின்னர் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பிராக்சியர் மற்றும் ரோட்டரி ஐகான் சங்கம் சார்பில் 3.25 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் வழங்கப்பட்டது. உணவு விற்பனை செய்ய கைவண்டி, சமையல் செய்வதற்கான பாத்திரங்கள் மற்றும் தையல் இயந்திரங்களும் வழங்கப்பட்டன. இதனை பிராக்சியர் அமைப்பின் ஆசிய துணை தலைவர் ஹான்சங் கிம் மற்றும் ரோட்டரி ஐகான் சங்க தலைவர் சங்கீதா மேத்தா மற்றும் திட்ட இயக்குநர் மூர்த்தி ஆகியோர் பயனாளிகளிடம் வழங்கினர். வரும் காலங்களில் மேலும் தேவையான உதவிகள் அனைத்தும் செய்து தரப்படும் என அப்போது தெரிவிக்கப்பட்டது.

Newsletter

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...

கோவையில் தீவிர டெங்கு கொசு ஒழிப்பு: வீடு வீடாக ஆய்வு மற்றும் புகை மருந்து தெளிப்பு பணிகள்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி, குனியமுத்தூர் கோகுலம் நகர் மற்றும்...

FMSCI இந்திய தேசிய ராலி ஸ்பிரிண்ட் சாம்பியன்ஷிப் வென்ற SRIT மாணவர் கதிரொளி

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி இயந்திரவியல் துறை மூன்றாம் ஆண்டு மாணவர் எஸ். கதிரொளி, FMSCI இந்திய தேசிய ராலி ஸ்ப...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையில் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 38.44 அடியாகவும் உயர்ந்துள்ளது....

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஜூன் 26...

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...