கோவையில் விஷவாயு தாக்கி உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு ரூ. 10 லட்சம் இழப்பீடு

கோவை : சரவணம்பட்டி அருகே கழிவு நீர் தொட்டியை சுத்தம் செய்யும் பணியின் போது, விஷவாயு தாக்கி உயிரிழந்தவர்களில், முதற்கட்டமாக ஒருவரின் குடும்பத்திற்கு ரூ. 10 லட்சம் இழப்பீட்டுத் தொகையை தேசிய துப்புரவு நல்வாழ்வு ஆணைய உறுப்பினர் வழங்கினார்.


கோவை : சரவணம்பட்டி அருகே கழிவு நீர் தொட்டியை சுத்தம் செய்யும் பணியின் போது, விஷவாயு தாக்கி உயிரிழந்தவர்களில், முதற்கட்டமாக ஒருவரின் குடும்பத்திற்கு ரூ. 10 லட்சம் இழப்பீட்டுத் தொகையை தேசிய துப்புரவு நல்வாழ்வு ஆணைய உறுப்பினர் வழங்கினார்.

கோவை மாவட்டம் கீரணத்தம் பகுதியில் கடந்த மாதம் 27 ஆம் தேதி சுப்பிரமணியம் என்பவருக்கு சொந்தமான பன்றி வளர்ப்பு மற்றும் இறைச்சி கூட கழிவு நீர் தொட்டியை சுத்தம் செய்ய ராஜப்பன், வேடியப்பன் மற்றும் மற்றொரு வேடியப்பன் சென்றனர். அப்போது, எதிர்பாராதவிதமாக விஷவாயு தாக்கியதில் மூவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதனையடுத்து, இடத்தின் உரிமையாளர் சுப்பிரமணியம் கோவில்பாளையம் காவல்துறையால் கைது செய்யப்பட்டார். இந்த நிலையில், விஷவாயு தாக்கி உயிரிழந்த குடும்பத்தினரை அரசு விருந்தினர் மாளிகையில் சந்தித்த துப்புரவு நல்வாழ்வு ஆணையத்தின் உறுப்பினர் ஜெகதீஷ் ஹிர்மேணி அவர்களுக்கு ஆறுதல் கூறினார்.

பின்னர், சம்பவம் நடந்த இடத்தை நேரில் பார்வையிட்டார். இதனையடுத்து, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலுள்ள கூட்ட அரங்கில் அனைத்து துறை அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அப்போது, விஷவாயு தாக்கி இறந்த 3 பேரின் குடும்பத்திற்கு ஊராட்சி பொதுநிதியில் இருந்து ரூ. 30 லட்சம் ரூபாயை வழங்க இருப்பதாக மாவட்ட ஆட்சியர் கு. ராசாமணி தெரிவித்தார். முதற்கட்டமாக, இறந்த ராஜப்பன் மனைவி சுந்தரியிடம் ரூ. 10 லட்சத்திற்கான காசோலையை தேசிய துப்புரவு நல்வாழ்வு ஆணைய உறுப்பினர் வழங்கினார். விஷவாயு தாக்கி இறந்த இரு வேடியப்பன்களின் சான்றிதழ்கள் கிடைத்தவுடன், ஓரிரு நாளில் அவர்களின் குடும்பத்தாரிடம் நிதியுதவி வழங்க இருப்பதாகவும், அதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மாவட்ட ஆட்சியர் ராசாமணி தெரிவித்தார்.

இந்நிகழ்வில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜித்குமார், மாநகர சட்டம் ஒழுங்கு காவல்துறை துணை ஆணையர் பாலாஜி சரவணன் உள்ளிட்ட அரசு துறை அதிகாரிகள் மற்றும் பல்வேறு அமைப்பை சார்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...

கோவையில் தீவிர டெங்கு கொசு ஒழிப்பு: வீடு வீடாக ஆய்வு மற்றும் புகை மருந்து தெளிப்பு பணிகள்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி, குனியமுத்தூர் கோகுலம் நகர் மற்றும்...

FMSCI இந்திய தேசிய ராலி ஸ்பிரிண்ட் சாம்பியன்ஷிப் வென்ற SRIT மாணவர் கதிரொளி

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி இயந்திரவியல் துறை மூன்றாம் ஆண்டு மாணவர் எஸ். கதிரொளி, FMSCI இந்திய தேசிய ராலி ஸ்ப...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையில் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 38.44 அடியாகவும் உயர்ந்துள்ளது....

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஜூன் 26...

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...